அது இதுவோ?? 💞Episode 17💞

2.7K 97 3
                                    

அவளது பதில் அவனை உயிருடன் கொன்றது.

"நான் லவ் பண்ண மாட்டேன். என் பெற்றோர் என் மேல் வைத்திருக்கின்ற நம்பிக்கையை ஒருபோதும் உடைக்க மாட்டேன். இவ்வளவு கஷ்டப்பட்டு என்னை பெரிய ஆளாக பார்க்க ஆசைப்படுகிறார்கள். அதை வீணாக போக விடமாட்டேன். மேலும் நான் இதுவரை யாரையும் லவ் பண்ணதும் இல்லை. இனியும் பண்ணவும் மாட்டேன்" என்பதே அவளது பதிலாக வந்தது.
இதை அவள் ஒரு காலத்தில் மீறுவாள். அவளும் காதலிப்பாள் அதுவும் தினேஷை என்று அவள் கனவிலும் எதிர்ப்பார்க்கவில்லை.

அவளும் மானிடப்பிறவி என்பதால் அவளுக்கும் உணர்வுகள் உள்ளன. ஒரு நாள் அவை வெளிவரும் அல்லவா??

"சரி, நான் சும்மா தான் கேட்டேன். இத சீரியஸாக எடுக்காதே. நாம நல்ல நண்பர்களாக எப்பவும் இருப்போம் " என்று அவளை சமாளித்தாள். அவனது மனதையும் சேர்த்து ஏமாற்றினான். ஆனால் அபி தன்னை தவறாக நினைத்தாளோ? இனி முன்பு போல் இருப்பாளோ?? என்று அவளின் அன்பை சேயொன்று தாயின் அன்புக்காக ஏங்குவது போல் ஏங்கினான் தினேஷ்.

இப்படி இருக்கையில் தினேஷிற்கு அவனது கல்லூரியில் சுசியின் நட்பு கிடைக்கப்பெற்றது. இதனால் அவள் மேல் கொண்ட காதலும் மறைய தொடங்கியது.

அபியும் முன்புபோல் மெசேஜ் செய்தாள். சுசியை பற்றி அவளுக்கு அறிய கிடைத்தது. தினேஷ் முன்புபோல் மெசேஜ் செய்யவில்லை கல்வி நடவடிக்கையினால். ஆனால் தன்னை விட சுசிக்கு முக்கியம் கொடுத்து விட்டானோ என்று எண்ண தொடங்கினாள்.

காலம் உருண்டோட,

அபியின் மனதில் தினேஷ் பெரிய இடத்தை பற்றிக் கொண்டான்.
அவனது messages களை பார்த்து தனியாக சிரித்தாள். தாயிடம் திட்டும் வாங்கினாள்.

க்ளாஸ்ஸிற்கு அவன் நுழையும் வரை அவனை கண்கள் தேடும். அவனது இருக்கையை கண்டும் காணானதுபோல் பார்த்து கொண்டு க்ளாஸ் இடைவேளையில் வேண்டுமென்று அவன் இல்லாத நேரத்தில் அவனது இருக்கையில் அமர்வாள். அவனது  காப்பிகளை திறந்து அவனது கையெழுத்தை தொட்டு இரசிப்பாள்.

சில வேளையில் இடைவேளையில் கடைக்கு செல்வாள். தினேஷை கண்டால் அவளது கால்கள் நடக்க மறுத்தாலும் பொய் சாக்கு கூறி நண்பியை இழுத்து செல்வாள். தினேஷின் நண்பர்களை அபியை கண்டால் "தினேஷ்" என்று கத்த, அவளது இதயம் வேகமாக அடிக்க, அவள் தானாகவே சிவந்து புன்முறுவல் செய்வாள். ஆகவே வேண்டுமென்றே அவர்களின் முன்னால் செல்வாள்.

"என்னடி உனக்கு நடந்தது? " என்று அவளது புதிய தோழி வாணி கேட்டாலும்,
"ஒன்றுமில்லை" என்று பொய் கூறி மழுப்புவாள்.

க்ளாஸ் முடிந்து அவன் போகும் வழியால் பின்னோக்கி அவனது காலடியில் சென்று சந்தோசமடைவாள். இவ்வாறு தன்னையே சந்தோசப்படுத்தி கொள்வாள் அபி. இவ்வாறு அவளை அறியாமலே அவளது மனதில் காதல் முளைத்தது.

அன்று, தினேஷிற்கு ஏதோ செமினார் பேப்பர்ஸ் தேவைப்படவே, அபிக்கு சுசி அந்த ஊரிற்கு வருவதாகவும் தான் கேட்டதை கொடுத்து அனுப்புமாறும் கூறினான்.
அபியோ தனது வீட்டு முகவரியை கொடுத்து அழைப்பு விடுக்க, அவளும் ஏற்று கொண்டாள்.

அபி தன்னை சற்று அலங்கரித்து கொண்டாள். நெற்றியில் கறுப்பு சிறிய பொட்டு, கண்ணில் மை... வருவது தினேஷிற்கு முக்கியமானவள் ஆயிற்றே. சுசியை விட தான் அழகாக இருக்க வேண்டும் என்ற ஒரு ஆவல் அவளினுள்ளே.

அவளுக்காக காத்திருந்த அபிக்கு கதவு சத்தம் கேட்க அவள் கதவை திறக்க விரைந்தாள்.

தொடரும்...

அது இதுவோ??(completed) Where stories live. Discover now