அது இதுவோ?? 💞episode 6💞

3.9K 122 0
                                    


பாடசாலையை விட்டு சந்தோசமாக வீட்டை அடைந்தான் தினேஷ்.

தினேஷின் அம்மா வேலை செய்யும்போது வானொலி போடுவது வழக்கம்.
அங்கே அவனுக்கென ஒரு பாடல் ஒலிபரப்பானதை கேட்டு ஆச்சரியத்தில் மூழ்கினான்.

ஆண் : ஹ்ம்ம் உன் பார்வையில்
பைத்தியம் ஆனேன் உன்
வார்த்தையில் வாக்கியம்
ஆனேன் உன் வெக்கத்தை
வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்

ஆண் : ஒரு நியாபக அலை
என வந்து என் நெஞ்சினை
நனைத்தவள் நீயே என்
வாலிப திமிரினை உன்னால்
மாற்றினேன்

ஆண் : பெண்ணாக இருந்தவள்
உன்னை நான் இன்று காதல்
செய்தேன் உன்னோட
அறிமுகத்தாலே நான் உன்னில்
மறைமுகம் ஆனேன் நரம்பெல்லாம்
இசை மீட்ட குதித்தேன் நானே

ஆண் : ல ல லைல லைலை
லே ல ல லைலை லே லை
ல லை லை லே லை ல லை
லை லே லைலலே

ஆண் : ஹ்ம்ம் உன் பார்வையில்
பைத்தியம் ஆனேன் உன்
வார்த்தையில் வாக்கியம்
ஆனேன் உன் வெக்கத்தை
வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்

ஆண் : ஹான் எது இதுவோ
எது இதுவோ உன் மௌனம்
சொல்கின்ற எழுத்தில்லா
ஓசைகள் என்னென்று நான்
சொல்லுவேன்

பெண் : இது அதுவோ
 ஆண் : ஹ்ம்ம்
இது அதுவோ
 ஆண் :ஹ்ம்ம்
சொல்லாத சொல்லுக்கு
இல்லாத வார்த்தைக்கு
ஏதேதோ அர்த்தங்களே

ஆண் : பெண் தோழன்
நான் ஆண் தோழி நீ
நட்புக்குள் நம் காதல்
வாழும்

பெண் : ஆண் ஆசை
நான் பெண் ஆசை நீ
ஆசைகள் பேராசைதான்

ஆண் : ல ல லைல லைலை
லே ல ல லைலை லே லை
ல லை லை லே லை ல லை
லை லே லைலலே

ஆண் : உன் பார்வையில்
பைத்தியம் ஆனேன் உன்
வார்த்தையில் வாக்கியம்
ஆனேன் உன் வெக்கத்தை
வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்

பெண் : உனதருகே
இருப்பதனால் இரவுக்கு
தெரியாத பகலுக்கு புரியாத
பொழுதொன்றை நீ காட்டினாய்

ஆண் : இதயத்தில் நீ
இருப்பதனால் நான்
தூங்கும் நேரத்தில்
என்னுள்ளே தூங்காமல்
நெஞ்சுக்குள் வாயாடினாய்

பெண் : கண்ணாடி நீ
கடிகாரம் நான் உன்னுள்ளே
ஓடோடி வாழ்வேன்
ஆண் : காதல் என்னும்
கடுதாசி நீ என்றென்றும்
அன்புடன் நான்

ஆண் : ல ல லைல லைலை
லே ல ல லைலை லே லை
ல லை லை லே லை ல லை
லை லே லைலலே

தன்னையும் மறந்து கேட்டு கொண்டிருந்த தினேஷ், அம்மாவின் சத்தத்தால் உலகுக்கு வந்தான்.

"என்னடா, இவ்வளவு ஆடாமல் அசையாமல் ஒரே இடத்தில் பேய் பிடித்தது போல் நிற்கிறாய்?? நன்றாக தானே இருக்கிறாய்?" என்று தினேஷின் நெற்றியில் கை வைத்து பார்த்தார்.

"அம்மா, நான் நல்லா தான் இருக்கிறேன். நீ வேற??" என்று அறைக்குள் நுழைந்தான்.

ஆம் அவன் எதிர்பார்த்த நேரமும் வந்தது. அவனை அழைத்து செல்ல நண்பன் வந்து இருந்தான்.
" ஆன்டி, சுகமாக இருக்கிறீர்களா? " என்று பேச்சு கொடுக்க,

"ஆம் மகன். படிக்கிறீர்களா? எக்ஸாம் வேற வருகின்றதே?"

"ம்ம்ம்.. படிப்போம் மெதுவாக ஆன்டி, அதுக்கு என்ன அவசரம்? நாங்கள் boys ஆகவே பரீட்சைக்கு முதல் நாள் படிக்கிறது தான் ஆன்டி கெத்தே." என்று நகைச்சுவையாக சொன்னான்.

"ஆ. ஆ. எப்படி சரி. நல்ல ரிசல்ட் வந்தால் சரி தான். அது சரி, தினேஷை பார்த்துக்கொண்டே இருக்கிறேன். கொஞ்ச நாளாக அவன் வித்தியாசமாக இருக்கிறானே. ஏதும் பிரச்சினையா? அல்லது காய்ச்சலா? " என்று தினேஷின் அம்மா வினவினார்.

" அதுவா... அது வந்து அவனுக்கு கா.... " என்று கூற வந்த நண்பனின் வாயடைத்து இழுத்து கொண்டு சென்றான் தினேஷ்.

தொடரும்..

அது இதுவோ??(completed) Where stories live. Discover now