அது இதுவோ?? 💞Episode 12💞

3.1K 102 0
                                    


பாடசாலை விடுமுறையும் முடிந்து விட்டது. ப்ராஜெக்ட் கொடுக்கும் டெட்லைன் நாளை.
குழு ப்ராஜெக்டை தனியாக புலம்பி கொண்டு செய்து கொண்டிருந்தாள் அபி.

"என்ன தான் மனதில் நினைத்து கொண்டு இருக்கிறாராம்? நான் நிம்மதியாக எவ்வளவு நாள் கழித்து வந்து இருக்கிறேன் இங்கே. வந்து ஆட்களோடு பேசாமல் இங்கே இதே செய்து கொண்டு இருக்கிறேன். நல்ல வர வேண்டும் " என்று திட்டிக் கொண்டிருக்க, நம்ம நாயகனுக்கு தும்மல் போனது.
"அண்ணா, யாரோ உன்னை ரொம்ப திட்டுகிறார்கள் போல" என்று அவனது அருமை தங்கை கூற,
அவனுக்கு இவை எல்லாம் நம்பிக்கை இல்லை. என்றாலும்,

"ஐயோ, சும்மா போ. யாரு தான் என்னை நினைக்க இருக்கிறார்கள்? " என்று அவன் கூற, தங்கையோ என்னமோ எண்ணி கொண்டிருந்தாள். விசித்திரமாக பார்த்து கொண்டிருக்கும் அண்ணனை பார்த்து " அண்ணா.. கண்டுபிடித்து விட்டேன்.. உன்னை இப்போது நினைக்கிறது A... இல் start ஆகின்ற பெயர், ஆனால் உங்களுக்கு தான் A இல் ஒரு ப்ரெண்ட்ஸ் யாரும் இல்லயே. " என்று யோசிக்க, தினேஷின் முகம் சந்தோசத்தால் மலர்ந்தது.

"என்னடி, என்னை திட்டுகிறாயா? சரி சரி, நான் தொலைபேசி இலக்கம் தந்து எவ்வளவு நாள்? ஒரு குறுஞ்செய்தியாவது இல்லை. அவ்வளவு திமிரா உனக்கு? நாளைக்கு உன்னை கவனித்து கொள்கிறேன்" என்று மனதுடன் பேசி கொண்டு இருந்தான்.
தொலைபேசியை பார்த்து தினேஷ் ஏமாந்ததது தான் மிச்சம்.

அபியும் ப்ராஜெக்டை முடித்து, குடும்பத்துடன் பயணமானாள். தவிர்க்க முடியாத காரணத்தால் இரவு பஸ் பயணம். பஸ்ஸில் விளக்குகள் அணைக்கப்பட்டு, பாட்டொலி காதை பிளக்க செய்தது.
அங்கும் இங்கும் நடமாடும் கரப்பான் உட்பட சிறு பூச்சிகள், சந்தன வாசம் எல்லாம் கலந்து அபியை உறங்க தடுத்தன. பக்கத்தில் அம்மாவும் தங்கையும் நல்ல உறக்கம். அபிக்கு பார்க்கவே பொறாமையாகவும் இருந்தது.

அவள் பாடசாலை, ப்ராஜெக்ட் என்று யோசனை போக, ஐயோ குரூப் மெம்பஸ் பெயர்கள எழுத மறந்துட்டேனே. தினேஷின் முகம் நினைவுக்கு வர, யாரின் பெயரை பிழையாக எழுதினாலும் தப்பிக்கலாம். ஆனால்... தினேஷின்.. அவனின் முழு பெயர் என்ன? என்று யோசித்தும் மூளைக்குள் வரவே இல்லை.

என்ன பண்ணலாம்? என்று யோசித்ததும் அவளுக்கு நல்ல ஐடியா வந்தது. அவனின் முகத்தின் முன்னால் கேட்காமல் ஒரு மெசேஜ் பண்ணி கேட்டு விடலாமே. ஆனால் நம்பர் எங்கே? சின்ன நோட்புக்கில் எழுதி வைத்தேனே என்று கைப்பையில் தேடி பார்க்க அதுவும் கிடைத்தது. அம்மாவின் கைப்பையும் தன்னுடனே இருக்க, தொலைபேசியை வெளியே எடுத்து இலக்கத்தை தட்டினாள்.

இதுவரை எந்த ஆண் நண்பனுக்கும் மெசேஜ் பண்ணியதே இல்லை. ஏதோ வித்தியாசமான அனுபவமாக இருந்தது. என்ன டைப் பண்ணலாம் என்று மனது ஊசலாட,

" ஹாய், நான் அபி. ப்ராஜெக்ட்டில் எழுத உங்கள் முழுப்பெயர் வேண்டும். தயவு செய்து பதில் அனுப்பவும்" என்று முழு தமிழில் டைப் செய்தாள் அபி. அவனுக்கு ஆங்கிலத்தில் பேசினால் தான் பிடிக்காது அல்லவா?

மறு முனையில் ஃபோன் வைப்ரேட் ஆக துடித்து எழும்பினான் தினேஷ். பக்கத்தில் தம்பி வேறு தூங்கிக் கொண்டு இருந்தான்.

இந்த நடுநிசியில் யாரு மெசேஜ் பண்ணுவது? என்று கண் சிமிட்டி கொண்டு பார்க்க, வியப்பில் மூழ்கினான். இது கனவு போல என்று மீண்டும் தூங்க போக, அவனை தூக்கம் தழுவவில்லை. மீண்டும் தொலைபேசியை எடுத்து பார்த்தான். அது கனவு அல்ல. நனவே. கிள்ளியும் பார்த்தான்.

மெசேஜ் ப்ரொம் மை சுவைட்ஹார்ட்.. வாவ்வ்வ்வ்...
மெசேஜை பார்த்து சிரித்து கொண்டான். முழு தமிழில் டைப் பண்ணிக்கிறாள். என்னுடைய பேச்சை தட்டி கழிக்க மாட்டாயாடி எப்போதும் என்றது மனம்.

சந்தோசத்தில் மிதந்து கொண்டே "என்ன என் பெயர் அவ்வளவு தெரியாதா?" என்று சிறு நக்கலுடன் "தினேஷ் ராமலிங்கன் " என்று பெயரை தட்டினான்.

தொடரும்...

அது இதுவோ??(completed) Where stories live. Discover now