அது இதுவோ?? 💞Episode 43💞

5.4K 110 37
                                    


"அபி, எங்களுக்கு பெண்பிள்ளை பிறந்து இருக்கிறாள்" என்றபடி பிள்ளையை அபிக்கு காட்ட, அந்த பிஞ்சு விரல்கள் அபியை இறுக்கமாக பிடித்து கொண்டன. அபி தன் இதழால் அந்த பிஞ்சு கரங்களுக்கு முத்தமிட்டாள்.

சிறுது நேரம் இருவரும் கொஞ்சிவிட்டு தொட்டிலில் வைத்துவிட்டு, அபியின் அருகே அமர்ந்தான் தினேஷ்.

" ஏன்?? டல்லா இருக்கிறாய்??" என்று அபி கேட்க,
"ஒன்னுமில்ல." என்று சரளமாக கூற,
"பொய் சொல்லாதே." என்று கட்டாயப்படுத்தி கேட்டாள் அபி.

"நீ என் கூட பேசாதே" என்று தினேஷ் கூற, அவனின் கண்களில் இருந்து கண்ணீர் தாரையாக கொட்டியது.
அபி அதை கண்டு துடிதுடித்து போனாள். எழுந்திருக்க முயன்றாள்.
"ஆஆஆஆஆ" என்று வலியால் மெதுவாக கதற,

"ஏன் அபி உனக்கு என்னை பிடிக்கவில்லையா? என் ஆயுள் வரை நீ வாழவேண்டும் என்று சொன்னதெல்லாம் பொய்யா? வாழ்ந்த 11 மாதங்களில் உனக்கு என்னை வெறுத்து விட்டதா?? ஏன் என்னை விட்டு போகலாம் என்று சொன்னாய்? எங்கள் பிள்ளையையும் என்னையும் அனாதையாக விட்டு போக நினைத்தாயா?? நீ இல்லாமல் ஒரு நிமிஷம் கூட என்னால் இருக்க முடியாதுடி. ஆனால் உன்னால மட்டும் எப்படி அப்படி நினைக்க முடிகிறது?? " என்று தினேஷ் கூற,
அபியோ பேய் அறைந்தது போல் நின்றாள்.

அவன் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் மனதின் ஆழத்தில் இருந்து வந்ததையும், காதலின் ஆழத்தையும் அபிக்கு உணர்த்தியது.

மேலும்," நான் ஒன்று நன்றாக யோசித்து முடிவு எடுத்துவிட்டேன். அனுஷா மட்டும் தான் நம்முடைய பிள்ளை. இனிமேல் உன்னை பிரசவ வேதனையில் என்னால் பார்க்கமுடியாது. இதே போல் நிலைமை வந்து எங்களை விட்டு போக உன்னை நான் விடமாட்டேன். இது கடவுள் மேல் சத்தியம்" என்று கூற,
அபியின் கண்கள் அவனின் காதலால் கண்ணீர் சிந்தியது.

அபிக்கு பேச்சே வரவில்லை. கைகளை விரித்தாள்.
தினேஷ் அவ்வலையில் வந்து சிக்க,
" சாரி டா. ஏதோ வலியில் உலறிவிட்டேன். உங்க இரண்டு பேரையும் விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்" என்று கூறி, தினேஷின் முகத்தை முத்த மழையால் நனைய வைத்தாள் அபி.

இரு குடும்பங்களும் தினேஷின் அழைப்பால் வந்துசேர, கைகளில் அனுஷா தவழ்ந்து கொண்டிருந்தாள். அபியையும் தினேஷையும் எல்லோரும் வாழ்த்தி, ஸ்வீட்ஸ்கள் வைத்தியசாலையில் பகிரப்பட்டன.

5 வருடங்களுக்கு பின்,

தினேஷினதும் அபியினதும் திருமண ஆல்பத்தை மூவரும் சேர்ந்து சிரித்தபடி பார்த்து கொண்டிருந்தனர்.
தினேஷின் தோள்களில் ஒருபக்கம் அபியும், மற்றைய பக்கத்தில் அனுஷாவும் சாய்ந்தகடி.

திருமணநாள் எடுத்த போட்டோக்கள்,
இது ரிசெப்ஷன் டே,
என்று அனுஷாவிடம் காட்ட,
"வாவ்.. என் மமி எவ்வளவு அழகா இருக்கா. பாபா அழகாக இருக்கிறாரு" என்று அனுஷா கூறலானாள்.

சிறிது நேரத்தில் அனுஷா உறங்கிவிட,
அபியும் தினேஷும் அவளது நெற்றியில் இதழ் பதித்தனர்.

"இந்த போட்டாக்கள் பார்க்கும்போது மறுபடியும் கல்யாணம் பண்ண ஆசை வருகின்றதுடி." என்று தினேஷ் கூற,
"ஹாஹா வரும் வரும்" என்று வெட்கத்தில் முகம் சிவக்க,
"உன்னை இல்லைடி. சுசியை" என்று கூறி அவளை வம்புக்கு இழுக்க, தலையணையால் நன்றாக அடி வாங்கி கொண்டான் தினேஷ்.
"சும்மா சொன்னேன்டி" என்று அவளை சமாதானம் செய்து கொண்டு அவளை கட்டியணைத்து தூங்கினான் தினேஷ்.

அபியும் தினேஷும், இருவர்களின் காதல் சின்னமான(அடையாளமான) அனுஷா உடன் வாழ்கின்ற நாட்கள் சுவர்க்கமாக நகர்ந்தன.

காலம் பறந்தாலும் அபியினதும் தினேஷினதும் சின்ன சின்ன செல்ல சண்டைகளுடன், சீண்டல்களுடன் காதல் மென்மேலும் கூடினாலும் குறையவில்லை.

💞முற்றும்💞

அது இதுவோ??(completed) Where stories live. Discover now