அது இதுவோ?? 💞Episode 19💞

2.6K 91 2
                                    


அன்று சனிக்கிழமை. வழமையை போல் சூரியக் கதிர்கள் அபியை தட்டி எழுப்பாட்ட, கண் விழித்தாள் அபி.
அவசரமாக தயாராகி, க்ளாஸை வந்தடைந்தாள்.

அன்று மற்றைய நாட்களை விட நேரத்துடன் வகுப்பிற்கு வந்து இருந்ததால் க்ளாஸில் யாருமே இல்லை. இன்று க்லாஸ் இருப்பது சுவரா? இன்று ஞாயிற்றுக்கிழமை தானே என்றும் மனம் பீதியை கிளப்ப, கொஞ்ச நேரம் பொறுத்திருந்து பார்ப்போம் என்று புத்தகத்தை திறந்து கடந்த கிழமை நடைபெற்ற க்ளாஸ் குறிப்புகளை ரிவைஸ் பண்ணிக் கொண்டிருக்க, படியில் யாரோ ஏறி வருவது போல் காலடி சத்தம் கேட்டது. பயத்துடன் க்ளாஸை கதவை நோக்கி பார்வையை செலுத்தினாள் அபி.

முகத்தை கைகளால் பயத்தால் மூடிக் கொண்டு சிறு இடைவெளியால் பார்த்தாள். அவளது விரலிடையில் ஒரு உருவம் நின்று கொண்டு இருந்தது. அங்கே.. காதல் பார்வைகளுடன் அங்கே தினேஷ் நின்று கொண்டு இருந்தான்.

"என்னடி, பயந்து விட்டாயா??" என்று கண்களை உருட்டி கொண்டு கேட்க,
"இல்லையே. நான் எதுக்கு பயப்பட வேண்டும்? " என்று அபி கூறினாலும் அவளது முகமோ பய சுபாவத்தை காட்டி கொடுத்தது.
" ஏன்?? பொய்யை எப்படி உண்மையாக்கி ஜெயிக்க பார்க்கிறாய்? "
"ஈஈஈஈ.. அது சரி. நீ ஏன் இன்று நேரத்துடன் வந்திருக்கிறாய்?? அதுதான் இன்று க்ளாஸ் கென்சலோ என்னவோ?" என நக்கலோடு சொன்னாள் அபி.
"உன்னை பார்க்கவேண்டும் போல் இருந்தது. சுசி கையில் கொடுத்த கீ சையினுக்கு அர்த்தம் என்னடி?" என்று கூறியபடி அவளை நெருங்கி வந்தான் தினேஷ். இந்த கேள்வியை சற்றும் எதிர்ப்பார்க்காது திடுக்கிட்டு போனாள் அபி.

தினேஷின் மூச்சுக்காற்று அவளது கன்னத்தை சூடாக்க, அவன் இவ்வளவு அருகில் வந்து இருப்பதும் அவன் கேட்ட கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என்றும் பயந்து கொண்டிருக்க,

" அது வந்து... நா.. உங்களை... " திக்கி திக்கி கூற, மனதில் உள்ளதை எழுதி சொல்ல தைரியம் இருந்தாலும் வார்த்தைகளால் ஏனோ சொல்ல பயமா இருக்கின்றதே. சொன்ன உடனே அவன் எப்படி ரியெக்ட் பண்ணுவான் என்றும் அபிக்கு பயம் தொற்றிக் கொண்டது.

அவளது தோளில் தினேஷ் தன் நாடியை வைத்து கொண்டு,
"சொல்லுடி.." என்று ஹாஸ்கி வொய்ஸில் கேட்க,
" என்ன நடந்தாலும் பரவாயில்லை, என்று, தினேஷ், ஐ திங்க ஐ ம் ஃபெல் லவ் வித் யூ. ஐ லவ் யூ" என்று படபட என்று அவசரமாக ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.

"என்னது..??" என்று அவளை தன் பக்கம் திருப்பி,

"இப்போ சொல்லு.. மறுபடியும்.." என்று தினேஷ் கூற,
செய்வது அறியாது,
"தினேஷ், ஐ லவ் யூ" என்று பயந்தபடி அவனது கண்களை பார்த்து கொண்டு கூறியதும் தாமதம் கட்டியணைத்துக் கொண்டான் தினேஷ்.

கட்டியணைப்பில் அதிர்ச்சி அடைந்தாள் அபி.
"அபி, நா இந்த நாளுக்கு தான் டி வெயிட் பண்ணேன். ஐ லவ் யூ டூ" என்று கட்டியணைப்பை இன்னும் நெருக்க, அபிக்கோ மூச்சு தட்டியது. ஆனால் காதலின் முதல் அணைப்பல்லவோ.. இருவரும் அதில் மிதக்க, அப்படி எவ்வளவு நேரம் இருந்தார்களோ என்று அவர்கள் அறியவில்லை.

"அபி, அபி.." என்று யாரோ அசைக்க, திடுக்கிட்டாள் அபி.

அங்கும் இங்கும் சுற்றி பார்த்தாள் அபி.
"அக்கா. எழுந்திரு.. அம்மா எழுப்பாட்டி எழுந்திருக்கவில்லையென்று எனக்கு 2 அடி போட்டு எழுப்ப சொன்னார்.. ஹாஹா ஒரு மாதிரி எழுந்து விட்டாயே அக்கா என்று" ஏதோ பெரிய சாதனை செய்தது போல் சொன்னபடி சென்று கொண்டு இருந்தாள் தங்கை.

அவளுக்கு பதில் கூற, அபி தான் இந்த உலகிலேயே இருக்கவில்லையே.
தான் கண்டதெல்லாம் கனவு. நனவல்ல என்று எண்ணியபோது கண்கள் கலங்கி, கண்ணீர் வடிந்து கொண்டு இருந்தது. இக் கனவு விரைவில் நனவானால் எவ்வளவு நன்றாக இருக்குமே என்று மனம் ஆவல் கொண்டது.

தொடரும்..

அது இதுவோ??(completed) Where stories live. Discover now