மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்

By Aarthi_Parthipan

498K 16.8K 3.2K

எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை.. More

💕
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25
அத்தியாயம் - 26
அத்தியாயம் - 27
அத்தியாயம் - 28
அத்தியாயம் - 29
அத்தியாயம் - 30
அத்தியாயம் - 31
அத்தியாயம் - 32
அத்தியாயம் - 33
அத்தியாயம் - 34
அத்தியாயம் - 35
அத்தியாயம் - 36
அத்தியாயம் - 37
அத்தியாயம் - 38
அத்தியாயம் - 39
அத்தியாயம் - 40
அத்தியாயம் - 41
அத்தியாயம் - 42
அத்தியாயம் - 43
அத்தியாயம் - 44
அத்தியாயம் - 45
அத்தியாயம் - 46
அத்தியாயம் - 47
அத்தியாயம் - 48
அத்தியாயம் - 49
அத்தியாயம் - 50
அத்தியாயம் - 52
அத்தியாயம் - 53
அத்தியாயம் - 54
அத்தியாயம் - 55
அத்தியாயம் - 56
அத்தியாயம் - 57
அத்தியாயம் - 58
அத்தியாயம் - 59
அத்தியாயம் - 60
Amazon Kindle இல் இலவசமாக படிக்க

அத்தியாயம் - 51

6.7K 252 58
By Aarthi_Parthipan

சூரிய ஒளி முகத்தில் பட, கண்களை சுருக்கி, சோம்பலாக விழிகளை திறந்தாள் மாயா. தன் கணவனின் அணைப்பில் உறங்கிக் கொண்டிருந்ததை உணர்ந்தாள். முந்தைய இரவின் நினைவுகள் அவள் மனதில் தோன்ற, முகத்தில் வெட்க புன்னகை பரவியது. மெதுவாக அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

நிம்மதியாக உறங்கி கொண்டிருந்த அவனின் முகம் பார்க்க அழகாக இருந்தது. அவனின் உறக்கம் கலையாமல், மெதுவாக அவன் அணைப்பில் இருந்து அவளை விடுவித்துக் கொண்டாள்.

குளித்து முடித்து வெளியில் வந்தவள் கடிகாரத்தை பார்த்தாள். மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. நேரம் ஆனதை உணர்ந்து, சமையல் அறைக்குள் நுழைந்தாள். அவனுக்காக தேநீர் போட்டு, எடுத்துக் கொண்டு அவர்கள் அறையை அடைந்தாள்.

மாறன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். மாயா தேநீர் கிண்ணத்தை கட்டில் அருகில் இருந்த ஒரு மேசையில் வைத்து விட்டு அவன் அருகில் அமர்ந்தாள். அவள் அருகில் அமர்ந்ததை உணர்ந்த மாறன் மெதுவாக புரண்டு படுத்து, அவன் கண்களை திறந்தான்.

ஈரக் கூந்தலை ஒரு துவாலை கொண்டு கட்டி இருந்தாள். முகம் முழுவதும் வெட்க புன்னகை பரவி இருக்க, அவனை பார்க்காமல் தரையை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

"டீ!" அவள் ஒற்றை வார்த்தையில் கூறி விட்டு அந்த இடத்தை விட்டு நகர நினைக்கையில், அவனின் கரங்கள் அவளை நகர விடாமல் இறுக்கமாக பற்றி இருந்தன.

"மாமா! கைய விடுங்க, எனக்கு கீழ நிறைய வேலை இருக்கு" அவள் சினுங்களுடன் கூற, "அதை ஏன் எங்கயோ பாத்துட்டு சொல்லுற? என்ன பாத்து சொன்னா தான் நான் நீ சொல்லுறதை கேட்பேன்" அவன் பிடி மேலும் இறுக்கமாக, மாயா நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

கயல் போன்ற விழிகளை உருட்டி அவள் அவனை பார்த்த போது, மற்ற அனைத்தும் மறந்து அவள் விழிகளில் தொலைந்து போனான். எழில் கொஞ்சும் அவள் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று அவன் மனதில் தோன்றியது, பார்வையை விலக்காமல் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவன் பார்வையில் அவள் மீண்டும் தன் வசம் இழந்தாள், அவள் முகம் மேலும் சிவந்தது. "இவ்வளவு அழகா இருந்தா.. சும்மா இருக்க எப்படி மனசு வரும்" என்று கூறி அவளை மேலும் அருகில் இழுத்துக் கொண்டு, அவள் கன்னத்தில் இதழ் பதித்தான். மேலும் நெருங்க நினைக்கையில், அதை தடுக்குமாறு அவன் கைப்பேசி ஒலித்தது.

"காலங்காத்தால யாரு?" அவன் கடிந்துக் கொண்டு கைப்பேசியை எடுக்க, மாயாவுக்கு சிரிப்பு வந்தது. அது தான் நல்ல சந்தர்ப்பம் என்று, வேகமாக கட்டிலில் இருந்து எழுந்து கொண்டாள்.

அவன் கண்களால் அவளை ஏமாற்றமாக பார்க்க, அவள் உதட்டை சுளித்து அழகு காட்டிவிட்டு, புன்னகையுடன் அறையை விட்டு வெளியேறினாள்.

"அம்மா!" மாறன் வள்ளியின் பெயரை பார்த்து உற்சாகமாக பேச, "பிறந்தநாள் வாழ்த்துக்கள் பா" என்றார் அவர். "நன்றி மா! முதல் முறையா நீங்க இல்லாம நான் பிறந்தநாள் கொண்டாடுறேன்" மாறன் சோகமாக கூற, "வருத்தப் படாத பா! நான் இன்னும் ஒரு வாரத்தில வந்திறுவேன். சரி! இன்னிக்கு கோவிலுக்கு போய்ட்டு வந்தீங்களா ரெண்டு பேரும்?" அவர் கேட்டார்.

"இல்ல மா! இனிமேல் தான் போகனும். இப்போ தான் எழுந்தேன்" அவன் சோம்பலாக கூற, "என்ன! இப்போ தான் எழுந்தாயா? மணி என்னாச்சு தெரியுமா?" வள்ளி ஆச்சரியமாக கேட்க, அப்பொழுது தான் அவன் நேரம் ஒன்பது என்பதை கவனித்தான்.

"சரி! சரி! ரெண்டு பேரும் கோவிலுக்கு போய்ட்டு வாங்க. மாயா கிட்ட கொடு" என்று அவர் கூற, மாறன் கீழே சென்று மாயாவிடம் கைப்பேசியை கொடுத்து விட்டு, அவர்கள் அறைக்கு சென்றான்.

மாயா பேசிக் கொண்டு இருக்க, அவன் குளித்து விட்டு வந்தான். மாயா அவன் வாங்கி கொடுத்த புடவையை உடுத்திக் கொண்டு, நீண்ட கூந்தலை அழகாக பின்னலிட்டு, நேர்த்தியாக தொடுக்கப் பட்ட மல்லிகை சரத்தை சூடிக் கொண்டு, அழகிய ரதியாக அவன் முன் வந்து நின்றாள்.

"மாமா! குங்குமம் வச்சு விடுங்க" அவள் அவன் முன் வந்து நிற்க, மாறன் புன்னகையுடன் குங்குமத்தை அவள் நெற்றியில் வைத்து விட்டான். இருவரும் சேர்ந்து கோவிலுக்கு சென்றனர்.

மாறன் அவள் வாழ்வில் வந்ததற்காக மனதார கடவுளுக்கு நன்றி தெரிவித்தாள் மாயா. அவன் நீண்ட நாட்கள் நலமுடன் வாழ மனதார கடவுளை வேண்டிக் கொண்டாள்.

"மாமா! சங்கர் அண்ணாவ மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வர சொல்லுங்க" மாயா கூற, மாறன் சம்மதித்தான்.

இருவரும் சிறிது நேரம் கோவிலில் அமர்ந்திருந்து விட்டு, வீட்டுக்கு புறப்பட்டனர். "அண்ணா!" வினித்தாவின் குரல் கேட்டு மாறன் திரும்பி பார்த்தான்.

வினித்தா, அவர்களிடம் ஓடி வந்தாள். "அண்ணா! ஹேப்பி பர்த்டே" அவள் மாறனிடம் ஆசையாக கூற, மாறன் புன்னகையுடன் அவளுக்கு நன்றி கூறினான்.

"குட்டிமா! நீ இங்க தனியாகவா வந்திருக்க?" மாறன் கேட்க, "இல்ல அண்ணா! அப்பா அம்மாவும் வந்திருக்காங்க" அவள் கூறி, பின்னால் வந்துக் கொண்டிருந்த அவள் தாய் தந்தையை காட்டினாள்.

மாறனை கண்டதும் அவளின் தந்தையின் முகம் மாறியது. பூங்குழலி மகிழ்ச்சியாக அவன் அருகில் வந்தார். "பிறந்தநாள் வாழ்த்துக்கள் பா" அவன் தலை கோதி அவர் கூற, மாறன் அவர் பாதங்களை பணிந்து ஆசி பெற்று கொண்டான்.

"நல்லா இருக்கியா டா?" மாயாவை பார்த்து பாசமாக அவர் வினவ, மாயா தலை அசைத்தாள். மாறன் மயில் வாகனத்தின் அருகில் சென்றான்.

ஆனால் அவர் அவனிடம் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட, நடந்தவற்றை பார்த்துக் கொண்டு இருந்த மாயாவுக்கு கோபம் வந்தது. பூங்குழலி வருத்தப் பட்டார்.

"அண்ணா உங்க பெயருக்கு அர்ச்சனை செய்ய தான் நாங்க இன்னிக்கு கோவிலுக்கு வந்தோம். அப்பாவ பத்தி கவலை படாதீங்க. வாங்க நாம போய் சாமி கும்பிடலாம்" என்று கூறி மாறனை அழைத்து சென்றாள். மாறன் புன்னாகையுடன் கோவிலுக்குள் சென்றான். சிறிது நேரம் அவர்களோடு செலவிட்டு விட்டு மாறனும் மாயாவும் வீட்டிற்கு திரும்பினர்.

"மாமா! மயில் வாகனம் மாமாவுக்கு உங்கள பிடிக்கல்லைனு தெரிஞ்சும் ஏன் அவருகிட்ட பேச நினைக்கிறீங்க?" மாயா சோகமாக கேட்டாள். "மாயா! எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து என்னோட அப்பாவ நான் பாத்தது இல்ல. ராஜாராம் மாமாவையும் என்னோட பெரியப்பாவையும் தான் என்னோட அப்பா ஸ்தானத்துல வச்சு பாக்குறேன். அவருக்கு எப்படியோ தெரியல ஆனா என்னால எப்பவும் அவுங்கள வெறுக்க முடியாது. கண்டிப்பா ஒரு நாள் அவர் மனசு மாறிடுவாரு. எனக்கு நம்பிக்கை இருக்கு" மாறன் கூற, மாயா மேலும் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

மாயா அவளாகவே மதிய உணவை தயார் செய்தாள். அவனுக்காக அனைத்தையும் ஆசையாக பார்த்து பார்த்து சமைத்தாள்.

"மேனிக்குள் காற்று வந்து மெல்லத் தான் ஆடக் கண்டேன்!!
மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை போல் ஓடக் கண்டேன்!!
இன்பத்தின் எல்லையோ இல்லையே இல்லையே!!
அந்தியும் வந்ததால் தொல்லையே தொல்லையே.."

பாட்டு பாடி கொண்டே சமைத்துக் கொண்டு இருந்தாள் மாயா.

"மேடம்! நான் உள்ளே வரலாமா?" மாறன் குரும் புன்னகையுடன் சமையல் அறைக்குள் நுழைந்தான்.

"மாமா! சங்கர் அண்ணாவுக்கு போன் பண்ணி சாப்பிட வர சொல்லுங்க. நான் எல்லாம் சமச்சுட்டேன்" அவள் மகிழ்ச்சியாக சொல்ல, மாறன் அவள் முகத்தை ஆசையாக பார்த்தான்.

அவள் அவன் முகத்தை பார்க்காமல் வேளையில் மும்மரமாக ஈடுபட்டிருக்க, அவன் அதை கெடுக்க, அவள் பின்னால் இருந்து அவளை அனைத்துக் கொள்ள, "மாமா! வேலை செய்யும் போது டிஸ்டர்ப் பண்ணாதீங்க" மாயா செல்லமாக கடிந்து கொண்டாள்.

"நீயும் தான் என்ன டிஸ்டர்ப் பண்ணுற! உன்னால தான் நான் இன்னிக்கு வயலுக்கு போகல, வேற எந்த வேலை செய்ய நினைச்சாலும் உன்னோடு நினைவு வந்து என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது. ஆனா நீ இங்க எத பத்தியும் யோசிக்காம ஜாலியா சமச்சிட்டு இருக்க? இதெல்லாம் ஞாயமே இல்ல" என்று கூறி அவளிடம் மேலும் நெருங்கி, அவன் தீண்டல்களால் அவளை சீண்டினான்.

"மாமா! சும்மா இருங்க. யாராவது வர போறாங்க" மாயா அவன் தீண்டலில் அவளை இழந்த போதும் அவனை கடிந்து கொண்டாள். "அதெல்லாம் யாரும் வர மாட்டாங்க" என்று கூறி அவன் அவளை மேலும் அணைத்துக் கொண்டு, அவள் முகத்தோடு முகம் வைத்து கொண்டான்.

அவனின் ஒவ்வொரு செயலிலும் மாயா அவளை இழந்தாள். "மாயா மா! வெளிய வேலை எல்லாம் முடிஞ்சிருச்சு" என்று கூறிக் கொண்டு வீட்டில் வேலை செய்யும் பெண் சமையல் அறைக்குள் நுழைய, மாறன் சட்டென்று அவளை விட்டு விலகிக் கொண்டான். மாயா வாய் விட்டு சிரித்து விட்டாள்.

"சரி! எல்லாரும் சாப்பிடுங்க! நேரமாச்சு" மாயா அந்த பெண்ணிடம் கூறி அவளை அனுப்பி விட்டு, மாறனை பார்த்து சிரித்தாள். "மாமா! இப்போ ஒழுங்கா உள்ள போங்க!" அவள் கரண்டியை உயர்த்திக் கூற, "சரி!" முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு வெளியில் சென்றான். மாயா அவன் செயல்களை பார்த்து நகைத்து விட்டு, சமையலில் கவனம் செலுத்த தொடங்கினாள்.

அரைமணி நேரத்தில் அனைத்தும் தயாராகி விட, சங்கரும் வந்து சேர்ந்தான். "வாங்க அண்ணா!" என்று கூறி அவனை வரவேற்று, மூவரும் சேர்ந்து மதிய உணவை சாப்பிட்டனர். சங்கர் முகம் சோகமாக இருப்பதை மாயா உணர்ந்தாள். சங்கரை அழைத்துக் கொண்டு போய், கொஞ்ச நேரம் பேசி சமாதானம் செய்யுமாறு மாறனுக்கு கண்களாலே செய்தி சொன்னாள் மாயா. மாறனும் அதை புரிந்து கொண்டு சங்கரை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றான்.

மாயா சிறிது நேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவள், மீனாட்சியை அழைத்தாள். அவளை சந்திக்க வேண்டும் என்று கூறி கோவிலுக்கு அவளை வரச் சொன்னாள். மீனாட்சியும் ஒப்புக்கொண்டாள்.

"மீனாட்சி உங்க கிட்ட சங்கர் அண்ணா பத்தி பேச தான் வர சொன்னேன்" மாயா நேராக விசயத்திற்கு வர, மீனாட்சி அதை எதிர்பார்த்திருந்ததாள், எனவே அமைதியாக அவள் முகம் பார்த்தாள்.

"சங்கர் அண்ணா உங்க மேல உயிரையே வச்சிருக்காங்க. உங்க நிலை என்னன்னு எனக்கு புரியுது ஆனா, சங்கர் அண்ணா மாதிரி ஒருத்தர் உங்க வாழ்க்கைல கண்டிப்பா இருக்கணும் அதுதான் என்னோட விருப்பம்.

வாழ்நாள் முழுதும் தனியா இருந்திடலாம்னு இப்போ நீங்க நினச்சு ஒரு முடிவெடுத்து வச்சிருக்களாம். ஆனா அது தவறான முடிவுனு உங்களுக்கு புரியும் பொழுது கண்டிப்பா நீங்க வருத்தப் படுவீங்க மீனாட்சி. நமக்காக வருத்தப் பட, நமக்காக சந்தோசப் பட, நமக்காக ஒருத்தர் நம்ம வாழ்க்கைல இருக்கணும், அதான் அவர்களை நாம வாழ்க்கை துணைனு சொல்கிறோம்.

உங்கள வற்புறுத்தி ஒத்துக்க வைக்கணும்னு என்னோட எண்ணம் இல்ல, ஆனா வருங்காலத்தில நீங்க இத நினச்சு வருத்தப் பட கூடாதுனு தான் நான் இத உங்ககிட்ட சொல்லுறேன்.

இதுக்கு மேல என்ன சொல்லுறதுனு எனக்கு தெரியல. ஆனா கண்டிப்பா நீங்க ஒரு நல்ல முடிவை எடுப்பீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு. நல்லா யோசிச்சு நல்ல முடிவா எடுங்க மீனாட்சி" மாயா அவள் கரம் பற்றிக் கொண்டு பேசி முடித்தாள்.

மீனாட்சி அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டாள்.

"அவ நிலமைல இருந்து யோசிச்சு பாரு. பாவம் அந்த பொண்ணு வரிசையா எத்தன கொடுமைகள அவ வாழ்க்கைல பாத்திருக்கா. அரியாம செஞ்ச ஒரு சின்ன தப்புக்காக அவ வாழ்க்கை இப்படி கேள்விக் குறியா போயிருச்சு. அந்த பொண்ணு நிலையில யார் இருந்தாலும் நடந்ததை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. மறுபடியும் கல்யாணம் அது இதுனு சொல்லி அவ மனச கஷ்டப் படுத்த என்னால முடியாது" நேற்று சங்கர் கூறிய வார்த்தைகளை எண்ணிப் பார்த்தாள்.

சங்கர் தன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பதை அவன் வார்த்தைகள் அவளுக்கு ஏற்கனவே உணர்த்தி இருந்தன, இன்று மாயா உரைத்ததில் இருந்த உண்மையும் அவளுக்கு விளங்கியது. இருந்த போதிலும் அவள் மனம் இன்னொரு உறவை ஏற்க மறுத்தது.

மாயா பேசியதற்கு எந்த பதிலும் சொல்லாமல் மீனாட்சி அங்கிருந்து கிளம்பி விட்டாள். மாயா அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். மீனாட்சி திருமணத்திற்கு சம்மதிப்பாளா? என்ற கேள்வி மட்டும் அவளுள் வலுவாக இருந்தது.
.
.

இரவு,

"மாமா! மீனாட்சி இந்த கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்களா?" மாயா மாறன் மடியில் தலை வைத்துக் கொண்டு கேட்க, "ஏன்? அதுல உனக்கு என்ன சந்தேகம்?" மாறன் அவளை வினவினான்.

"அதுக்கு இல்ல மாமா! நான் இன்னிக்கு அவுங்க கிட்ட இத பத்தி பேசினேன் ஆனா அவுங்க எதுவும் சொல்லாம போய்ட்டாங்க. அதான் கேட்டேன்?" என்றால் அவள் சோகமாக.

"இங்க பாரு மாயா! எந்த ஒரு உறவையும் அவ்வளவு சீக்கிரம் ஏத்துக்க முடியாது. அதுவும் மீனாட்சி வாழ்க்கைல நிறையா இழந்து இருக்கா, அதான் புதுசா வர சொந்தத்தை ஏத்துக்க அவ மனசு ஒத்துக்க மாட்டேங்குது. ஒவ்வொரு விஷயமும் ஒரு நாள் முடிவுக்கு வந்து தான் ஆகனும். அதே மாதிரி இதுவும் ஒரு நாள் முடிவுக்கு வரும். இதுல நீயோ நானோ எதுவும் செய்ய முடியாது.

அதே சமயம், கேள்வி பிறந்தால் தான் அதுக்கான பதிலும் கிடைக்கும். இப்போ மீனாட்சி மனசுல இது எல்லாம் நல்லா பதிஞ்சு இருக்கும். கண்டிப்பா இத பத்தி யோசிக்க ஆரமிச்சிருப்பா. நாம பேசி அவுங்க சம்மதத்தை வாங்க முடியாது. ஆனா, சங்கரோட காதலும், இந்த காலமும் மீனாட்சி மனசை கண்டிப்பா மாத்தும். கண்டிப்பா மீனாட்சி நல்ல முடிவா எடுப்பானு எனக்கு நம்பிக்கை இருக்கு" மாறன் உறுதியாக கூற, மாயாவுக்கும் நம்பிக்கை வந்தது.

"சரி! அங்க பாருங்க! முழு நிலவு எவ்வளவு அழகா இருக்கு!" மாயா வானத்தில் இருந்த நிலவை காட்டி கூற, "இந்த நிலவை விட அது அழகா இல்லையே" என்று கூறி அவள் முகம் பார்த்தான். "அடடா!" என்று கூறி அவள் கலகலவென சிரித்தாள். இருவரும் சேர்ந்து அழகிய முழு நிலவை ரசித்தவாறு பல கதைகள் பேசி மகிழ்ந்திருந்தனர்.

அதே சமயம், மீனாட்சி அவள் இல்லத்தில் அமர்ந்து ஒரு வேதனையுடன் முழு நிலவை மறைத்திருந்த கார் மேகங்களை வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள். அவள் வாழ்வில் நடந்த அனைத்து நிகழ்வுகளும் அவள் கண் முன் தோன்ற, கண்கள் ஓரம் கசிந்த கண்ணீரை துடைக்க மனமில்லாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

அங்கு சங்கரின் நிலையும் அதுவே, அவனும் அவளை நினைத்து நிலவை பார்த்து வராத உறக்கத்தை வர வைக்க கஷ்ட்டப் பட்டு முயன்று கொண்டு இருந்தான்.

Hi friends,

51ஆம் அத்தியாயம் உங்களுக்காக. உங்கள் மதிப்புமிக்க கருத்துகளை பகிரவும்.

Continue Reading

You'll Also Like

452K 15.1K 50
மணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படிய...
150K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.
12.7K 347 35
இது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்
15.2K 634 29
இந்த கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால். இது அழகான ஒரு குடும்பக்கதை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு ,காதல் பறிமாற்றங்கள் மற்றும் குழந்தையில்லா தம்பத...