அத்தியாயம் - 6

8K 232 13
                                    

"அஜய்!!!" மாயா மலர்ந்த முகத்துடன் அவனை வரவேற்றாள். "மாயா!! எப்படி இருக்கே?" புன்னகையுடன் வினவினான். "நல்லா இருக்கேன் அஜய். நீ எப்படி இருக்கே? ஏன் இங்க வர இவ்வளவு நாள் ஆச்சு உனக்கு" அவள் புருவம் உயர்த்தி கேட்க, "கொஞ்சம் வேலை மாயா. இப்போ வந்துடேன்ல. இனிமேல் எல்லாரும் சேர்ந்து சந்தோசமா என்ஜாய் பண்ணலாம்" என்றான் சிரிப்புடன்.

"சரி. உள்ள போ, எல்லாரும் உன்னதான் எதிர்பாத்துட்டு இருக்காங்க" மாயா கூற, அவன் வீட்டுக்குள் நுழைந்தான்.

"அஜய், வா பா!" ராஜாராம் அவனை வரவேற்றார். அஜய் அனைவரையும் சந்தித்து விசாரித்து விட்டு அவன் அறைக்கு சென்றான்.

அவன் குளித்து முடித்து வந்தவுடன், வள்ளி எடுத்து வைத்த உணவை அனைவரும் ஒன்றாக அமர்ந்து சுவத்தனர்.

"ஆமா மாயா, மீனா, வனித்தா யாரையும் காணோம். எங்க போனாங்க?" அஜய் வினவ, "எல்லாரும் வயலக்கு போய்ட்டாங்க" அவள் ஆர்வமில்லாமல் பதில் அளித்தாள், "தனியாவா போயிருக்காங்க?"

"இல்ல பா, மாறன் கூட்டிட்டு போயிருக்கான். இன்னிக்கு வயல்ல நாத்து நடுறாங்க, பசங்க அதை பாக்கணும்னு ஆர்வமா கேட்டாங்க, அதான் அவன் அழைச்சிட்டு போயிருக்கான்" அவன் அடுத்த கேள்விக்கு வள்ளி பதிலளித்தார்.

"ஓ, சார் அவர் கெட்டதும் இல்லாம, இவுங்களையும் கெடுக்க பாக்குறாரா?" என்றான் பகட்டாக.

"அவன் என்னப்பா கெட்டு போய்ட்டான். ஊருக்கே சாப்பாடு போட்டுட்டு இருக்கான், படிச்சிட்டு வேலை செய்பர்களுக்கு ஈடா சம்பாதிக்கிறான். இத விட என்ன நல்லா இருக்கனும்" ராஜாராம் அவனுக்கு பதில்லளிக்க, "இல்ல மாமா, அதுக்குன்னு விவசாயத்துல என்ன வளர்ச்சி இருக்க போகுது. நாளைக்கு உலகம் அடுத்த கட்டத்துக்கு போகும்போது இவன் விவசாயம் பண்ணிட்டு முன்னேறாம இருப்பான். அவன் படிப்புக்கு எவ்வளவோ கவர்மெண்ட் ஜாப் கெடச்சுது அவன் அதையெல்லாம் உதரிட்டு வயலயே நம்பி வாழ்ந்துட்டு இருக்கான்" அவன் ஏதோ சமாளிக்க.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now