அத்தியாயம் - 42

7K 277 69
                                    

"மாமா, இது அவளோட வாழ்க்கை, நீங்க கண்டிப்பா அவள கேட்டு தான் ஒரு முடிவுக்கு வரனும். எனக்காக நீங்க மீனாவ கேட்டுட்டு மேல முடிவு எடுங்க" மாறன் வேண்டிக் கேட்டுக் கொள்ள, ராஜாராம் அதற்கு ஒப்புக் கொண்டார்.

"மீனா..!" அவர் அழைக்க, மீனா கீழே இறங்கி வந்தாள். வெளிறிய அவளின் முகத்தை பார்த்து மாறனுக்கு வேதனையாக இருந்தது. "மீனாவுக்கு இந்த விஷயம் ஏற்கனவே தெரியுமா?" கண்களால் மாயாவிடம் அவன் உரையாட, "தெரியும்!" என்று மாயா பார்வையாலே அவனுக்கு பதில் அளித்தாள்.

மீனா என்ன சொல்ல போகிறாள் என்று தெரியாமல் மாறன் அவள் முகத்தை பார்த்தான். ராஜாராம் முகம் முழுவதும் புன்னகையுடன் மீனாவிடம் நடந்தவற்றை கூற, மீனா அவர் முகத்தை பார்த்தாள்.

"சொல்லு மா, உனக்கு இந்த திருமணத்தில் சம்மதம் தானே?" ராஜாராம் நம்பிக்கையுடன் வினவ, "இல்லைனு சொல்லிரு மீனா" மாறன் மனதில் எண்ண, அவன் நினைத்ததற்கு மாறாக, "உங்க விருப்பம் பா! நீங்க எது செஞ்சாலும் என் நல்லதுக்காக தான் இருக்கும்" இடியாக வந்தது மீனாவின் பதில்.

மாறன் அவன் செவிகளை நம்ப முடியாமல் அவள் முகம் பார்த்தான். அவள் ஏற்கனவே முடிவெடுத்து விட்டு பேசுவது போல் தோன்றியது அவனுக்கு. அவன் மாயாவின் முகம் பார்க்க, அவள் விழிகளில் வடிந்த கண்ணீரும் அதையே அவனுக்கு உணர்த்தியது. வேறெதுவும் பேச முடியாத நிலையில் இருவரும் அங்கு அமர்ந்திருந்தனர்.

மீனா அவள் முடிவை கூறி விட்டு அங்கிருந்து சென்று விட, "இப்போ சரி தானே மாப்பிள்ளை. எனக்கு தெரியும் என்னோட பொண்ணு கண்டிப்பா சம்மதிப்பானு" அவர் பெருமிதமாக கூற, மாறன் எதுவும் பேசமுடியாமல் மௌனமாக அமர்ந்திருந்தான்.

"அப்புறம் என்ன மாப்பிள்ள, நான் என் நண்பனுக்கு நம்ம வீட்டுல எல்லாருக்கும் சம்மதம்னு சொல்லிடுறேன். ஒரு நல்ல நாளா பாத்து அவுங்கள பொண்ணு பாக்க வர சொல்லிடுறேன்" உற்சாகமாக பேசி விட்டு சென்றவரை பார்த்து என்ன செய்வதென்று தெரியாமல் அங்கே அமர்ந்திருந்தான் மாறன்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now