💕

37.5K 381 25
                                    

"மாங்கல்யம் தந்துனானேனா
மமா ஜீவன ஹெட்டுனா
கந்தே பாட்னமிஸுபகே
த்வாம் ஜீவ ஷரட சதாம்" திரு மாங்கல்யத்தை புரோகிதர் மாறன் கையில் கொடுத்தார். ஒருவித தயக்கத்துடன் அதை பெற்றுக்கொண்ட மாறன் வாடிய அவள் முகத்தை ஒரு கணம் வருத்தத்துடன் பார்த்தான்.

"என்ன மன்னிச்சுறு மாயா, எனக்கும் வேறு வழி இல்ல. உனக்கு எந்த ஒரு குறையும் இல்லாம சந்தோசமா பாத்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு. உன் ஆசைகள நிறைவேற்ற நா எல்லா முயற்சியும் செய்வேன்" என்று மனதில் உறுதி செய்துக்கொண்டு திருமாங்கல்யத்தை அவள் கழுத்தில் கட்டினான்.

தன் அனைத்து கனவுகளும் ஒரு நொடியில் களைந்ததை அந்த நிமிடம் உணர்ந்தாள் மாயா. கண்களில் வெள்ளமாய் பெருக்கெடுத்த கண்ணீரை துடைக்க இயலாமல் சிலையாய் அவன் அருகில் அமர்ந்திருந்தாள்.

அங்கு கூடியிருந்த அனைவர் முகத்திலும் சந்தோஷம் நிறைந்திருந்தது. மணமக்களை மனதார வாழ்த்தினர். மாயாவிற்கோ அந்த வாழ்த்துக்கள் யாவும் சாபங்களாக தெரிந்தன. தன் வாழ்வு ஒரே நாளில் தலைகீழாக மாறிபோகும் என்று ஒரு பொழுதும் அவள் நினைத்திருக்கவில்லை.

திடீர் திருமணம், அதுவும் தனக்கு சிறிதும் பொருத்தமில்லாத ஒருவனோடு. மாயா எதிர்பாரா அனைத்தும் ஒரு நொடியில் அதுவும் அவள் சம்மதத்துடன் நடந்து முடிந்தது. இதுதான் விதியா? இனி இதுதான் என் வாழ்வா? என் கனவை அடுப்படியிலும், வயல்வெளியிலும் தொலைக்க போகிறேனா? என்று அவள் மனம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் இன்றி தவித்தாள்.

"வாழ்க்கை என்பது வாழ்ந்திடத்தானே இதில என்ன கட்டுப்பாடு, மனசுக்கு பிடிச்ச வேலைய செஞ்சிட்டு சந்தோசமா வாழனும். மனசுக்கு பிடிச்சத மட்டும் செய்யனும் அதுல பாரம்பரியம், வழக்கம் இப்டி ஒரு தடையும் வரக்கூடாது" என்ற எண்ணம் கொண்ட அழகான, தைரியமான மாடர்ன் பொண்ணு மாயா. ஃபேஷன் டெக்னாலஜி இரண்டாம் ஆண்டு படிச்சுட்டு இருக்க பொண்ணு. நம்பர் ஒன் டிசைனர் ஆகணும்னுங்கிறது மாயாவின் கனவு.

"விவசாயம், அம்மா, சொந்த ஊர் இதுதான் உலகம். இந்த ஊர்ல விவசாயம் செஞ்சு இது வளம் பலமடங்கா உயர்தனும்" என்னும் கனவோடு சந்தோசமா பாரம்பரியத்தை பின்பற்றி வாழர இளைஞன் நம்ம மாறன். எம். எஸ். சி. அக்ரிகல்ச்சர் பட்டதாரி. விவசாயத்துல பல புது திட்டங்கள் கொண்டுவந்து அதில் வெற்றியும் பெற்றவன்.

எதிர் பாரா நேரத்தில் எதிர் பாரா சூழலில் எதிர் எதிர் எண்ணம் கொண்ட இருவர் இணையும் திருமணம்.

இப்படி இரு வேறு துருவங்களா இருக்கும் மாயாவும் மாறனும் கணவன் மனைவியாகும் போது பல குழப்பங்கள், வேற்றுமைகள், கவலைகள் நிறந்திருந்தாலும் காதல் என்ற அதிசயம் இந்த வேறுபாடுகளை எவ்வாறு ஒற்றுமையாக மாற்றியது? எவ்வாறு ஒரு எதிர்பாரா பந்தம் இருவரது வாழ்க்கையையும் முற்றிலும் மாற்றியது பாப்போம்.....!!

மாயாவின் வாழ்வில் இத்திருமணம் ஒரு வரமாக அமையபோகிறதா இல்லை அவள் எண்ணியவாறு சாபமாக அமையபோகிறதா?? அவர்களுடன் நாமும் பயணித்து தெரிந்துகொள்ளலாம்.

வணக்கம் நண்பர்களே!

தமிழில் நாவல் எழுத வேண்டும் என்ற என் பல நாள் கனவை நிறைவேற்ற இந்த முயற்சி. பிழைகளை மன்னித்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

தோழி ஆர்த்தி😊

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now