அத்தியாயம் - 59

5.5K 241 53
                                    

"சர்! உங்க பையன் அபாய கட்டதை தாண்டிட்டாரு. நீங்க வேணும்னா இப்போ போய் பார்க்கலாம்" மருத்துவர் கூற, மயில் வாகனம் அஜயை பார்க்க சென்றார். முகம் முழுவதும் கட்டு போட பட்டு, அவன் உடலில் பல இயந்திரங்கள் பொருத்தப் பட்டு இருந்தது. எந்த ஒரு தந்தையும் மகனை அந்த சூழலில் பார்க்க நினைத்திருக்க மாட்டார்கள். அவர் கண்கள் கலங்கின. அவன் அருகில் சென்றார்.

அவன் கூந்தலை அவர் மென்மையாக வருட, அஜய் மெதுவாக கண்களை திறந்தான். அவன் விழிகளின் ஓரம் கண்ணீர் கசிந்தது.

"இப்படி ஒரு வலிய ஒரு அப்பாவி பொண்ணுக்கு தர பாத்தியே பா! அதான் கடவுள் அந்த வலி எப்படி இருக்கும்னு உனக்கு காட்ட நினச்சிருக்காரு" மனம் வலித்த போதும், அஜய் தான் செய்த தவறை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி அந்த வார்த்தைகளை கூறினார் மயில் வாகனம். அவனால் எதுவும் பேச முடியவில்லை. ஆனால் அவன் கண்ணீர் அவன் செய்த தவறை அவன் உணர்ந்திருக்கிறான் என்பதை அவருக்கு எடுத்துரைத்தது.

"இன்னும் கொஞ்ச நேரம் நீ ஓய்வு எடு. எத பத்தியும் யோசிக்காம கொஞ்ச நேரம் நல்லா தூங்கு" அவர் மென்மையாக கூற, அஜய் வெறுமனே கண் இமைத்தான்.

"சர், உங்கள டாக்டர் கூப்பிடுறாரு!" செவிலியர் ஒருவர் வந்து மயில் வாகனத்தை அழைக்க, அவரும் வருவதாக சொல்லி மருத்துவரை சந்திக்க சென்றார்.

"முகத்துல இருக்க காயம் முழுசா குணமாகும் வரை அவரால் பேச முடியாது. இது சரியாக இன்னும் சில வாரங்கள் ஆகும். ஆனா இப்போ அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல. கீழ விழுந்ததில் தலைக்கு கொஞ்சம் பலமா அடி பட்டு இருக்கு. அதற்கான எல்லா டெஸ்ட்டும் எடுத்திருக்கோம், அந்த முடிவுகள் எல்லாம் வந்ததும் தான், மேற்கொண்டு என்ன செய்யலாம்னு எங்களால உறுதியா சொல்ல முடியும்" மருத்துவர் கூற, மயில் வாகனம் சிறு சோகத்தோடு அதை கேட்டுக் கொண்டார்.

மறுநாள், பூங்குழலி, கஸ்தூரி இருவரும் மருத்துவமனைக்கு வந்து அவனை பார்த்தனர். அவன் தவறு செய்திருந்த போதிலும், அந்த நிலையில் அவனை காண இருவருக்கும் பரிதாபமாக இருந்தது. "இப்படி ஒரு நிலைக்கு தன் மகளை ஆளாக்க நினைத்தானே" என்ற எண்ணம் ஒருபுறம் இருந்த போதும், சிறு வயது முதல் அவனை வளர்த்திருந்ததால் அவன் மீது பரிதாபமும் தோன்றியது கஸ்தூரிக்கு.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now