அத்தியாயம் - 16

8.4K 281 55
                                    

வானெங்கும் சூழ்ந்திருந்த இருளை விரட்டி தன் தங்க நிற சுடரொளியை உலகெங்கும் பரப்பி கொண்டிருந்த வேளையில் வானம் பார்பதற்கு மிகவும் அழகாக தெரிந்தது. எப்பொழுதும் அதை ரசித்து பார்க்கும் மாறன் அன்று எதையும் ரசிக்கும் மனநிலையில் இருக்கவில்லை. அவன் வெறுமனே வானை வெறித்த படி நின்றிருந்தான். மாயாவின் வார்த்தைகள் அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தன. அவள் கூறிய அனைத்தும் நூறு சதவீதம் சரி என்றே அவனுக்கும் தோன்றியது. "உன் தாயை காப்பாற்ற ஒரு பெண்ணின் வாழ்வை அழித்து விட்டாயே!" என்று அவன் மனம் மீண்டும் மீண்டும் உரைத்தது.

"மாறா!" என்று புன்னகையுடன் கையில் தேநீருடன் வந்த தாயைபார்த்ததும் அவன் முகத்திலும் சிறு முறுவல் தோன்றியது. "நீங்க ஏன் மா மாடி ஏறி வரிங்க? நானே இன்னும் கொஞ்ச நேரத்தில கீழ வந்திருப்பேனே!" என்றான் சிறு வருத்தத்தோடு. "அதெல்லாம் ஒன்னும் இல்ல பா. நீ இத குடிச்சிட்டு குளிச்சுட்டு வா சாப்பிடலாம்" என்றார் பாசமாக.

"சரி மா, வரேன்" என்று அவன் பதில் அளிக்க, அவர் கீழே சென்றார். மாறன் ஊருக்கு வந்து அன்றுடன் ஒரு வாரம் இருக்கும். வந்த நாள் முதல் மகன் முகம் வாடி இருப்பதை வள்ளி உணர்ந்தார். தன் மகனின் அந்த நிலைக்கு தான்தான் காரணம் என்ற குற்ற உணர்வு அவர் மனதில் ஆறாமல் பதிந்து இருந்தது.

மாயாவை படிக்க அவள் வீட்டுக்கு அனுப்புவதற்கு முந்தைய நாள் மாறன் வள்ளிக்கு மாயாவின் நிலையை விளக்கி கூறினான். அதை கேட்டு அவள் மனம் கலங்கியது, அன்று அவள் இருந்த சூழலில் அவள் மகனின் திருமணத்தை பற்றி மட்டும் எண்ணி தன் அண்ணன் மகளின் வாழ்க்கையை அழித்து விட்டோமோ என்று தோன்றும். அதை நினைத்து வருத்தப்படுவார்.

இதில் எந்த வருத்தமும் இல்லாதவர் ராஜாராம் மட்டுமே. தன் மகளுக்கு தான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை சிரந்ததாக அமையும் என்று ஆணித்தரமாக நம்பினார். ஒருநாள் அனைத்தும் மாறும், தன் மாப்பிள்ளையின் நற்குணம் ஒரு நாள் தன் மகளுக்கு புரியும் என்று நம்பினார்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now