அத்தியாயம் - 5

8.6K 246 9
                                    

அன்றைய நாள் மிகவும் இனிமையாக கழிந்தது மீனாவுக்கு, அழகிய நாடகத்தை மனதார கண்டு ரசித்தாள். மாயாவுக்கு அதில் விருப்பம் வரவில்லை. மீனவுக்காக அது முடியும் வரை அவளுடன் இருந்தாள்.

நாடகம் முடிந்து அவர்கள் வீட்டுக்கு வர மணி பதினோன்ற்கு மேல் ஆனது.

"என்ன மா, நாடகம் பிடிச்சு இருந்துதா?" என்றார் வள்ளி ஆசையாக. "ரொம்ப பிடிச்சுது அத்தை. எல்லாரும் ரொம்ப நல்லா நடிச்சாங்க. நான் தமிழ்ல நாடகம் பத்தி படிச்ச மாதிரியே இருந்துச்சு" என்றாள் ரசனையோடு.

"மாயா உனக்கு பிடிச்சு இருந்ததா?" என்று புன்னகையுடன் வினவ, அவளோ "எனக்கு அவ்வளவு பிடிக்கலை அத்தை. நிறைய புரியவும் இல்லை" என்றாள் சோகமாக.

"அத்த, அவளுக்கு இதெல்லாம் எப்பவும் பிடிக்காது. தமிழும் படிக்கல. ஸ்கூல்ல ஹிந்திதான் படிச்சா" என்றாள் மீனா.

"உனக்கு ஏன் மா பிடிக்கல" என்று வள்ளி வினவ, "அது என்ன புருசன் என்ன தப்பு செஞ்சாலும் மனைவி அதை பொறுத்துக்கணும். அவனும் எதோ அந்த பொண்ணு அவனுக்கு அடிமை மாதிரி நடத்துறான். எனக்கு அந்த கான்செப்ட்டே பிடிக்கல அத்த" என்றாள் முகம் சுழித்து.

"அத்த, இவ கோவலன் கண்ணகி பத்தி சொல்லுறா. சிலப்பதிகாரம்ல ஒரு பகுதிதான் இன்னைக்கு நாடகம். அது முழு கதையும் தெரியாம இப்படி பேசுறா" என்றாள் மீனா எதார்த்தமாக.

"சரி மாயா, நான் அந்த கதைய முழுசா நாளைக்கு சொல்லுறேன். அப்புறம் உன் கருத்த சொல்லு" என்று வள்ளி புன்னகையுடன் கூற, "சரி அத்த" என்று மாயா ஒப்புக் கொண்டாள்.

மறு நாள் காலை உணவை முடித்துவிட்டு வள்ளியை தேடி சென்றாள் மாயா.

"அத்தை!!"

"வாடா தங்கம், சொல்லு" என்றார் அன்பாக.

"அத்த, எதோ கத சொல்லுறேன்னு சொன்னீங்களே. இப்போ சொல்லுங்க" என்றாள் ஆர்வமாக.

"சரி சொல்லுறேன். கண்ணகி முழு கதையும் சொல்லுறேன். அதுக்கு அப்புறம் உன் கருத்த சொல்லு" என்றார். அவள் சரி என்பது போல் தலை அசைத்தாள்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now