அத்தியாயம் - 44

6.6K 257 61
                                    

"உன்ன எப்பவும் பாத்துக்கிட்டே இருக்கணும் போல தோணுது. இந்த பிரிவு இன்னும் எவ்வளவு காலம்னு தெரியல" சிவா சோகமாக பேச, "காலைல தான் பாத்தோம், அதுக்குள்ள என்னவோ பாத்து பல வருஷம் ஆன மாதிரி பேசுறீங்க" மீனா புன்னகையுடன் கேட்டாள்.

"ஏற்கனவே ரொம்ப நாள் பிரிஞ்சு இருந்துட்டோம் மீனா, இனிமேலும் இதை என்னால தாங்கிக்க முடியலை. உனக்கு அப்படி எதுவும் தோனலையா?" அவன் சோகமாக கேட்க, "தோணுது சிவா.! அது எப்படி தோனாம இருக்கும். ஆனா நாம கொஞ்ச நாள் பொறுமையா இருந்து தான் ஆகனும். முதல் நீங்க முழுசா குணமாகனும். அதுதான் இப்போ என்னோட ஒரே பிரார்த்தனை" மீனா அவள் மன எண்ணங்களை கூற, அவன் புன்னகைத்தான்.

"எல்லாம் சீக்கிரம் சரி ஆயிடும். எதுவும் கவலை படாம, நீ நிம்மதியா இரு" அவன் கூற, "ம்ம்! நீங்களும் எதப் பத்தியும் யோசிச்சு கவலை படாம, நிம்மதியா ரெஸ்ட் எடுங்க. இப்போ போய் கொஞ்ச நேரம் தூங்குங்க. காலைல இருந்து நீங்க ரெஸ்ட் எடுக்கவே இல்ல, கோவிலுக்கு வந்து, டிராவல் பண்ணி, ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்கிட்டீங்க" அவள் அக்கறையாக பேசினாள்.

"சரிங்க மேடம்! உத்தரவு" அவன் பணிவாக கூற, அவள் புன்னகையுடன் கைபேசியை வைத்தாள். வெகு நாட்களுக்கு பிறகு அவள் மனம் எந்த சலனமும் இன்றி நிம்மியாக இருப்பதை உணர்ந்தாள் மீனா.

கஸ்தூரி எடுத்து வைத்திருந்த உணவை மாயா பரிமாற, மாறனும் மீனாவும் ஆனந்தமாக பசியாறினர்.

இரவு, மாயா அவள் அறைக்கு வருகையில் மணி பத்தை கடந்திருந்தது. அந்த சமயம் மாறன் பால்கனியில் நின்று கொண்டு இருந்தான். "மாமா! நீங்க தூங்கலையா?" மாயா அவன் அருகில் சென்றாள். "தூங்கனும்" அவன் முருவலுடன் கூறிவிட்டு வெறுமனே வானத்தை பார்த்து நின்றிருந்தான்.

"அப்படி என்ன தீவிர சிந்தனை?" அவள் அவன் அருகில் நின்றபடி கேட்க, "ஒன்னும் இல்ல மாயா, மாமா கிட்ட எப்படி மீனா காதல் விஷயத்தை சொல்லுறதுனு தான் யோசிச்சுட்டு இருக்கேன்" அவன் கவலையாக பதில் அளித்தான்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now