அத்தியாயம் - 43

6.5K 266 82
                                    

கடவுள் சன்னிதானம், அங்கிருந்த அமைதியான சூழல், அனைத்தும் அவள் மனதிற்கு ஆறுதலாக இருப்பதை உணர்ந்தாள் மீனா. மாயா கோவிலுக்கு அழைத்த போது அவள் வர மறுத்தால், இருப்பினும் மாயா அவளை வற்புறுத்தி அழைத்து வந்தாள்.

"மீனு நான் போய் பிரகாரத்தை மூணு முறை சுத்திட்டு வரேன். அது வரைக்கும் நீ இங்கேயே இரு" என்று கூறி, மாயா மீனாவை தனியாக விட்டுவிட்டு சென்றாள். மீனாவும் அங்கும் இங்குமாக பறந்துக் கொண்டிருந்த சிட்டுக்குருவிகளை பார்த்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.

"மீனா!" அவளுக்கு நன்கு பரிட்சியமான குரலில் அவளை யாரோ அழைக்க, குரலுக்கு சொந்தக்காரன் யார் என்று அறிந்திருந்த மீனாவின் இதய துடிப்பு அதிகரித்தது. மீண்டும் ஒரு முறை அவனை பார்ப்போமா என்று ஒரு காலத்தில் ஏங்கி கொண்டு இருந்தவள், தற்போது எதற்காக இவ்வாறு ஒரு சூழல் அமைந்தது என்று மனதில் எண்ணிக் கொண்டு அவனை திரும்பி பார்த்தாள்.

அவனை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள். அவனை அவ்வாறு ஒரு நிலையில் பார்ப்பாள் என்று அவள் ஒரு பொழுதும் நினைத்து பார்த்திருக்க மாட்டாள்.

நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தான் சிவா. கை, கால்கள் தலை என அவன் உடல் முழுவதும் கட்டுகள் போட பட்டிருந்தது. அவன் மீது கோபம் இருந்த போதிலும், அவன் அவள் மனதை உடைத்திருந்த போதிலும், அவனை அப்படி ஒரு சூழலில் பார்த்ததும் மற்ற அனைத்தும் மறந்து போனது அவளுக்கு.

"மாமா! எல்லாம் நாம நினைச்ச மாதிரி நடக்குமா?" மாயா சந்தேகமாக கேட்க, "கண்டிப்பா நடக்கும், நீ எதுக்கும் கவலை படாதே. நடக்கிறத மட்டும் பாரு" மாறன் உறுதியாக கூறினான். "ரெண்டு பேரும் சமாதானம் ஆகிடனும் கடவுளே!" என்று இறைவனை வேண்டிக் கொண்டு, அங்கு நிகழ்வதை பார்த்தாள் மாயா.

தானாகவே மீனாவின் கால்கள் அவன் இருந்த திசை நோக்கி விரைந்தன. அவனோடு நின்றிருந்த தேவா, மீனா வருவதை பார்த்து அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டான்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now