அத்தியாயம் - 58

5.4K 206 70
                                    

அவள் பணி புரிந்து கொண்டிருந்த போது, ஒரு நாள் அவள் கண்ணெதிரில், ஆயிரம் மக்கள் நடமாடிக் கொண்டு இருந்த சாலையில் தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. அதை பார்த்த அவள் நெஞ்சம் பதைபதைத்து போய் இருந்தது. எந்த பெண்ணுக்கும் இனி அவ்வாறு ஒரு நிலை வரக்கூடாது என்று அவள் அன்று வேண்டிக் கொண்டாள், ஆனால் இன்று அதே சூழல் அவள் வாழ்விலும் உருவாகி இருந்தது.

அதே சமயம் அந்த பெண்ணின் இடத்தில் அவள் இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும் என்றும் சிந்தித்து இருந்தாள். "பயப் பட கூடாது! பயப் பட கூடாது! நம்ம பயம் தான் அவனுக்கு முதல் வெற்றி. மீனா! உன்னால் முடியும்" என்று உறுதியாக மனதில் எண்ணிக் கொண்டு அவன் முகத்தை நிமர்ந்து கோபமாக பார்த்தாள்.

அவள் பயப்பட கூடும் என்று எண்ணி இருந்த அவன், அவள் நெருப்பு பார்வையில் ஒரு நொடி தடுமாறி போனான். அந்த ஒரு நோடியை அவள் அவளுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டாள். அவன் கையில் வைத்து இருந்த குடுவையை வேகமாக தட்டி விட்டாள். அவன் கையில் இருந்த குடுவை கீழே விழுந்து உடைந்து, அதில் இருந்த அமிலம் கீழே சிந்தியதில் சில துளிகள் அவன் கையில் பட்டு அவன் கை காயமடைந்தது.

கண் இமைக்கும் நொடியில் அனைத்தும் நடந்து விட, அந்த இடத்தில் மக்கள் கூட்டம் கூடியது. "மீனா!" என்று அலறிக் கொண்டு சிவா அந்த இடத்திற்கு வந்தான்.

மீனா அங்கே கண்களில் நெருப்பு போங்க நின்றிருந்தாள். அவள் எதிரில் இருந்தவன் அவளை தாக்குவதற்கு தயார் ஆவதை போல் அவனுக்கு தோன்ற, விரைந்து சென்று அவனை தாக்கினான்.

அவன் தாக்குதலை எதிர்பார்த்திராத அஜய் நிலை தடுமாறி கீழே விழுந்தான். அவன் கையில் இருந்து கீழே சிந்தி இருந்த அமிலத்தின் மீது அவனே விழுந்து விட, வலி பொறுக்க முடியாமல் கதறினான். சிவாவும் அதை எதிர்பார்த்திருக்க வில்லை.

அதிர்ந்து போய் நின்றிருந்த மீனாவிடம் சென்று அவளை அவனோடு அணைத்துக் கொண்டு தேற்றினான். கீழே விழுந்த அஜய் அந்த வேதனையிலும் வலியிலும் துடித்து, சிறிது நேரத்தில் மயங்கி விட்டான்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now