அத்தியாயம் - 30

7.7K 286 64
                                    

இதமான குளிர் காற்று அவளை வருடி செல்ல, அவள் கூந்தல் அழகாக காற்றுடன் சேர்ந்து அசைந்தது. "மீனாவும் தான் உங்களுக்கு மாமா பொண்ணு, என்னவோ நான் மட்டும் தான் மாமா பொண்ணுன்னு சொல்லுறீங்க?" அவன் அதற்கு என்ன பதில் சொல்ல போகிறான் என்று அறிந்திருந்தும், அதை அவன் வாயால் கேட்க நினைத்து அந்த கேள்வியை கேட்டாள்.

"மீனா எனக்கு ஒரு குழந்தை மாதிரி தான், அவளை ஒரு நாளும் என்னோட மாமா மகளா நான் பாத்ததே இல்ல, நீ அப்படி இல்ல. எனக்கு இருந்த ஒரே ஒரு முறை பொண்ணு நீதான். உன்ன மட்டும் தான் நான் அப்படி நினைச்சேன்" அவள் எதிர் பார்த்ததை அவன் கூறி விட, அவள் மனம் எல்லையற்ற மகிழ்ச்சியை அடைந்திருந்தது.

"சரி மாயா, ரொம்ப நேரம் ஆச்சு, நீ போய் தூங்கு. காலைல பாக்கலாம். இனிய இரவு வணக்கம்" அவன் புன்னகையுடன் சொல்ல, அவளும் புன்னகைத்து விட்டு அவள் அறைக்கு சென்றாள்.

அவள் எவ்வளவு முயன்றும் உறக்கம் வர மறுத்தது. அவன் இன்று அவளிடம் பேசிய வார்த்தைகள் அவள் செவிகளில் மீண்டும் மீண்டும் ஒலித்து கொண்டே இருந்தன. வெகு நேரம் முயற்சித்து இறுதியில் உறங்கி விட்டாள்.
.
.

மறுநாள்,

"அத்த! நான் கொஞ்சம் பொருட்கள் எல்லாம் வாங்கனும். டவுனுக்கு எப்படி போகணும்னு அத்த? பஸ் எதாவது இருக்குமா?" மாயா வள்ளியிடம் கேட்க, "பஸ் எல்லாம் எதுக்கு மா! மாறன அழசிட்டு போக சொல்லுறேன். நீ கிளம்பி இரு" அவர் அவள் முகத்தை வருடு கூறினார்.

"சரி அத்த! நான் கிளம்புறேன்" என்று கூறி மாயா அவள் அறைக்கு சென்றாள்.

மாறன் காலை உணவிற்கு வீட்டுக்கு வர, "மாறா! இன்னிக்கு உனக்கு வேலை நிறையா இருக்கா?" அவர் எதார்த்தமாக கேட்க, "இல்ல மா! ஏன் இங்க எதாவது வேலை இருக்கா?" அவன் வினவினான்.

"இல்ல பா, மாயா தான் டவுனுக்கு போகணும்னு சொன்னா. அதான் கேட்டேன். நீ இன்னிக்கு அவள கொஞ்சம் டவுனுக்கு கூட்டிட்டு போய்ட்டு வா பா. இங்க வந்ததுல இருந்து நீங்க ரெண்டு பேரும் எங்கேயும் போனது இல்ல" அவர் அவனிடம் கூற, "சரி மா! போய்ட்டு வரோம்" அவனும் ஒப்புக்கொண்டான்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Wo Geschichten leben. Entdecke jetzt