அத்தியாயம் - 22

8.1K 322 82
                                    

"இங்க பாரு மாயா" அவள் அருகில் அமர்ந்து அவன் அவளை அழைக்க, அவள் நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள். "என்ன?"

"நான் உன்கிட்ட கோப பட்டு இருக்க கூடாது. நீ சொன்னது சரிதான், நான் எதோ பதட்டத்துல அப்படி நடந்துக்கிட்டேன். இனிமேல் அப்படி நடக்காது. நா என்னோட கோபத்த குறைச்சுக்கிறேன். இப்போ அந்த கோவத்த நீ சாப்பாடு மேல காட்டாம, வந்து சாப்பிடு. அப்போதான் மாத்திரை சாப்பிட முடியும்" அவன் கனிவாக கூறியபோது அவள் மனம் மாறியது. அவள் வெறுமனே அவன் முகம் பார்த்திருக்க, அவன் புன்னகையுடன் சாப்பாட்டை அவள் கையில் கொடுத்தான்.

அவள் மறுப்பேதும் சொல்லாமல் அதை பெற்றுக் கொண்டாள்.
.
.

மறுநாள்,

கதவு தட்டும் சத்தம் கேட்டு மாறன் கதவை திறந்தான். அங்கே நின்றிருந்த பெண்ணை அவன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பார்த்த ஞாபகம் இருக்க, "வாங்க!" என்றான் மலர்ந்த புன்னகையுடன். "எப்படி இருக்கீங்க அண்ணா?" அவளும் புன்னகையுடன் வினவ, "நல்லா இருக்கேன் மா" என்று அவன் பதில் அழித்து அவளை அமர சொன்னான்.

"மாயா என்ன பண்ணுறா?" அவள் வீட்டை சுற்றி முற்றி பார்த்து வினவ, "உள்ள தான் இருக்கா, போய் பாருங்க" அவன் அவள் இருந்த அறையை காட்டினான். அவளும் மாயாவை பார்க்க அவள் அறைக்கு சென்றாள்.

"மாயா!" அவள் குரல் கேட்டு மாயா கண் விழித்தாள். "ஹேய்! சுமி! வா" அவள் சிறு புன்னகையுடன் கூற, சுமி அவள் அருகில் சென்றாள். "இப்போ கால் வலி எப்படி இருக்கு? பரவா இல்லையா?" சுமி அக்கறையாக கேட்க, "இப்போ பரவால சுமி. கொஞ்சம் வலி இருக்கு அவ்வளவு தான்" மாயாவின் பதில் கேட்டு நிம்மதி அடைந்தாள். இருவரும் பேசிக் கொண்டு இருக்கையில், மாறன் அவளுக்கு தேநீர் கொண்டுவந்து தர, "ஐய்யோ அண்ணா நீங்க ஏன் இந்த வேலை எல்லாம் செய்றீங்க" சுமி பதட்டமானாள்.

"பரவா இல்ல மா, மாயாவுக்கு உடம்பு சரியில்லை. அப்போ நான் தானே வீட்டுக்கு வந்த விருந்தாளிய உபசரிக்கனும். எனக்கு இதுல எந்த கஷ்டமும் இல்லை. இத குடிச்சுட்டு பேசிட்டு இருங்க" என்று கூறி தேநீரை அவளிடம் கொடுத்து விட்டு வெளியே சென்றவனை ஆச்சர்யமாக பார்த்தாள் சுமி.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now