அத்தியாயம் - 2

11.1K 307 16
                                    

டிப்ளமோ முடித்த மாயாவும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மீனாவும் ஒன்றாக கல்லூரி படிப்பை தொடங்கினர். மீனா பொறியியல் கல்லூரியில் அவள் விரும்பிய கணினி துறையை தேர்வு செய்தால்.


மாயா, அவளுக்கு பிடித்த ஃபேஷன் டிசைனிங் துறையை தேர்வு செய்து ஒரு சிறந்த கல்லூரியிலும் சேர்ந்து விட்டாள். பல கனவுகளுடன் கல்லூரி செல்ல தொடங்கினார்கள் இருவரும்.

சென்ற சில வாரங்களிலேயே கல்லூரி படிப்புடன், வடிவமைப்பதிலும் கூடுதல் அறிவைப் பெறுவதற்காக சில கூடுதல் வகுப்புகளிலும் சேர்ந்தால் மாயா.

அத்துடன் கூடுதல் வகுப்புகளில் கிடைத்த அறிவால் மீனாவுக்கு சில ஆடைகளையும் வடிவமைத்தாள். அனைவரும் வியக்கும் அளவுக்கு அவள் வடிவமைப்பு இருந்தது. இவ்வளவு குறுகிய நாட்களில் அதுபோன்ற ஒரு படைப்பை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

ஆரம்பத்தில் கஸ்தூரி மாயா இந்த துறையை தேர்வு செய்ததில் சிறிது மன வருத்தத்துடன் இருந்தார், நாட்கள் செல்ல செல்ல அந்த துறையில் மாயாவிற்கு இருந்த ஆர்வம் அவர் மனதை மாற்றியது.

மாயாவின் நாட்கள் மகிழ்ச்சியுடன் சென்றன. அவள் கல்லூரி நாட்களையும் வடிவமைப்பு வகுப்புகளையும் மிகவும் ரசித்தாள்.

அன்று மாலை மாயா சோர்வாக வீட்டுக்குள் நுழைந்தாள். "என்னமா, இன்னிக்கு ரொம்ப டயர்டா இருக்கே" கஸ்தூரி பரிவுடன் கேட்டார். "ஒன்னும் இல்ல மா, இன்னிக்கு கொஞ்சம் அலைச்சல் அத்தோடு பஸ்ஸும் கிடைக்கல அதான்" என்றால் சோஃபாவில் அமர்ந்து. "எதுக்கு ரொம்ப கஷ்டப்படுறே, இப்போதானே ஃபர்ஸ்ட் இயர் பொறுமையா பண்ணு" அவள் தலையை வருடி அறிவுறுத்தினார்.

"சரி மா, இப்போ ஒரு கப் காபி, தல வலிக்குது" கெஞ்சலாக கேட்டால்.

கஸ்தூரி ஒரு கப் காபியைக் கொடுத்து, உடை மாற்றி பின் ஓய்வெடுக்க சொன்னார். மாயா சுவையான காபியை ரசித்து சுவைத்தாள். பின் அவள் தோராயமாக சில இசை சேனல்களைப் பார்த்துக்கொண்டு இருந்தால். அதற்குள் மீனா உள்ளே வந்தாள், அவளும் அவளுடன் சேர்ந்து கொண்டாள். சில மணி நேரம் கழித்து ராஜாராமும் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பினார்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now