அத்தியாயம் - 45

6.6K 277 88
                                    

"மாமா! வாங்க வீட்டுக்கு போகலாம்" வீட்டுக்கு அருகில் இருந்த பூங்காவில் அமர்ந்திருந்த ராஜாராமை மாறன் வேண்டிக் கேட்டுக் கொண்டான். "மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு மாப்பிள்ள" ராஜாராம் வேதனை கலந்த குரலில் பேச, "மாமா! இத பத்தி பேச இது சரியான இடம் இல்ல. வாங்க வீட்டுக்கு போகலாம்" மாறன் அவரை சமாதானம் செய்ய முற்பட்டான்.

"இல்ல மாப்பிள்ள எனக்கு வீட்டுக்கு வர மனசு வரல, கொஞ்ச நேரம் இங்கேயே இருக்கேன்" அவர் விரக்தியாக பேச, மாறன் அவர் அருகில் அமர்ந்தான்.

"மாமா! நீங்க இந்த அளவுக்கு வேதனை படுற அளவுக்கு என்னாச்சு மாமா?" மாறன் அவன் மனதில் இருந்ததை கேட்க, "என்ன மாப்பிள்ள, இத விட பெரிய விஷயம் என்ன இருக்கும். என்னோட பொண்ணு யாரோ ஒரு பையன காதலிக்கிறேனு சொல்லுரா. அவ இப்படி சொல்லுவானு நான் நினைக்கவே இல்ல" அவர் வேதனை பட்டார்.

"அவ எந்த தப்பும் செய்யல்ல மாமா. இப்படி பட்ட பொண்ணுங்க கிடைக்க நீங்க தான் குடுத்து வச்சிருக்கனும். இந்த காலத்துல இப்படி பட்ட பொண்ணுங்க எந்த வீட்டுல இருக்காங்க மாமா?" மாறன் அவன் மன எண்ணங்களை சொல்ல, அவர் குழப்பமாக அவன் முகம் பார்த்தார்.

"ஆமா மாமா! அன்னிக்கு என்னோட கல்யாணம் நின்னு போன போது நீங்க சொன்ன ஒரே வார்த்தைக்கு கட்டுப் பட்டு உங்க ரெண்டு பொண்ணுங்களுமே உங்க முடிவ ஏத்துக்க தயாரா இருந்தாங்க. வேற எந்த பொண்ணு மாமா இப்படி ஒரு முடிவு எடுப்பா?

உங்க வார்த்தைய ரெண்டு பேரும் அவ்வளவு மதிக்குறாங்க. இப்போ கூட உங்களோட சம்மதத்த தான் கேட்டு மீனா உங்ககிட்ட பேசி இருக்கா. இப்போ நீங்க இதுல விருப்பம் இல்லைனு சொன்ன உங்க வார்த்தைக்காக அவளோட காதல தூக்கி போடவும் அவ தயங்க மாட்டா.

அப்படி பட்ட பொண்ணுக்காக நீங்க உங்க ஈகோவ விட்டுக் கொடுக்க மாட்டீங்களா மாமா?" அவன் அவர் முகத்தை பார்க்க, குற்ற உணர்ச்சியில் அவர் அவன் பார்வையை தவிர்த்தார்.

"மீனா தப்பான வழியில போய் இருந்தா நானே அத தடுத்து இருப்பேன் மாமா. ஆனா சிவா அப்படி பட்ட பையன் இல்ல, ரொம்ப நல்ல பையன், நாமளே தேடி இருந்தாலும் இப்படி ஒரு பையன் நம்ம மீனாவுக்கு கிடச்சிருக்க மாட்டான்" மாறன் அவர் முகத்தை பார்த்து அவன் மனதில் இருந்தவற்றை பேசி முடித்தான்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now