அத்தியாயம் - 15

8.2K 279 61
                                    

முகிலில்லாத வானின் நீல வண்ண புடவையில் ஆங்காங்கே நட்சத்திரங்கள் பதித்தது போல் வெள்ளை கற்கள் பதிக்கப் பட்டு உயர்ரக எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்திருந்த அந்த அழகிய புடவையில் வானத்து தேவதை போல தோன்றினாள் மாயா. அந்த எளிய அலங்காரமே அவளை அதீத அழகாக காட்டியது. அலங்காரம் முடிந்து வந்து நின்ற மாயாவை பார்த்த மீனா அவளை அணைத்துக் கொண்டாள்.

"அக்கா, நீ ரொம்ப அழகா இருக்க" என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டாள். அவள் தோழிகளும் அதையே சொல்ல, வெட்க்கத்தில் அவள் முகம் சிவந்தது. அந்த நிகழ்வில் அவளுக்கு எள்ளளவும் விருப்பம் இல்லாத போதும் தன் பெற்றோருக்காக சம்மதித்து மகிழ்ச்சியாக இருப்பது போலவும் காட்டிக் கொண்டாள்.

மாயாவை பார்த்த கஸ்தூரி அவளுக்கு நெற்றி முறித்தாள். "என் கண்ணே பட்டுறும் போல இருக்கு டா தங்கம்" என்று அவள் நெற்றியில் முத்தமிட்டாள். மாயா புன்னகையுடன் மேடையில் நின்றாள்.

சிறிது நேரத்தில் மாறனும் மேடைக்கு வந்து சேர்ந்தான். அந்த கருப்பு நிற கோட்டும் சூட்டும் நீல நிற சட்டையும் அவனுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. முகத்தில் ஒரு புன்முறுவலுடன் மேடைக்கு வந்த அவனை ஆச்சர்யமாக பார்த்தனர் மாயாவின் தோழிகள்.

"ஹே!! மாயா நிஜமாவே மாப்பிள்ளை சூப்பர் டி, நீ எதோ கிராமம்னு சொன்னதால வேஸ்ட்டி சட்ட போட்டுட்டு மைனர் மாதிரி இருப்பாருனு தப்பா நினச்சுட்டோம். இவரு ஹீரோ மாதிரி ஜம்முனு இருக்காரு. செம்ம லக்கி டி நீ" என்று அவள் தோழிகள் அவனை புகழ அவளுக்கு எரிச்சலாக இருந்தது.

"போதும் போதும்! இந்த இடத்தில இருந்து கிளம்புறீங்களா?" அவள் அதே எரிச்சலுடன் கூற, "மாப்பிள்ளைய சைட் அடிக்குரோம்னு கோப படுறா போல. சரி வாங்க போகலாம், இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா இவ நம்மள கொண்ணுருவா போல இருக்கு" என்று கேலியாக பேசி சென்றனர்.

"இந்த வானரங்கள கூப்பிட்டு இருக்கவே கூடாது" என்று எண்ணி விட்டு மேடையில் அமைதியாக நின்றிருந்தாள். மாறன் அவள் அருகில் கம்பீரமாக நின்ற போது, அவளுக்குள் எதோ ஒரு வித இனம்புரியாத உணர்வு தோன்றியதை உணர்ந்தாள். ஆனால் அதை பொருட்படுத்தாமல் அவனுக்கும் அவளுக்கும் எந்த ஒரு சம்மதமும் இல்லை என்பது போல் நின்றிருந்தாள்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now