அத்தியாயம் - 35

7.2K 295 62
                                    

இதமான தென்றல் காற்று அவள் முகத்தை மெல்ல வருட, மாயா மெதுவாக கண்களை திறந்தாள். அவள் அறையில் இருப்பதை உணர்ந்தாள், தலை மிகவும் பாரமாக இருந்தது. தலையில் கை வைத்து அமர்ந்தாள். என்ன நடந்தது என்று அவள் நினைவிற்கு கொண்டு வர முயற்சித்து கொண்டு இருக்கையில், அறை கதவு திறக்கப் படும் ஓசைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

மாறன் புன்னகையுடன் அங்கே நின்று கொண்டு இருந்தான். "எழுந்திட்டயா?" அவள் அருகில் சென்றான். அவள் வெறுமனே அவன் முகம் பார்க்க, "இந்தா இத குடி" என்று அவன் கையில் வைத்திருந்த கோப்பையை அவளிடம் கொடுத்தான்.

மாயா அதை பெற்றுக் கொண்டாள் ஆனால் அவள் மனமோ என்ன நடந்தது என்ற யோசனையில் ஆழ்ந்திருந்தது. "என்ன யோசனை? இத குடி, தலை வலி போயிடும்" அவன் கூற, "மாமா! என்ன நடந்துச்சு?" அவள் புரியாமல் அவன் முகம் பார்த்தாள்.

"நீ குடிச்சது பதநீர் இல்ல, கள். நீ தெரியாம அத குடிச்சதால கொஞ்சம் மயக்கம் ஆய்ட்ட" அவன் நடந்ததை கூற மாயாவிற்கு கூச்சமாக இருந்தது. "இப்படி செய்து விட்டாயே?" என்று தன்னை தானே திட்டிக் கொண்டாள்.

"சாரி மாமா! நீங்க சுண்ணாம்பு தடவணும்னு சொன்னீங்க, சுண்ணாம்பு வெத்தல பாக்கு கூட வாய் சிவக்க தானே போடுவாங்க. இதுவும் அது மாதிரி தான் போலனு நினச்சு தான் அத குடிச்சேன்" அவள் நினைத்தை கூற, "உனக்கு நான் அத விளக்கமா சொல்லி இருக்கணும். சொல்லாம விட்டுட்டேன்.

ஒவ்வொரு பொருளும் அதுக்கு இணையான பொருள் கூட சேரும் போது ஒவ்வொரு விதமான பயன்களை தரும் மாயா. சேரவேண்டிய பொருகள் சரியான அளவுல சேர்ந்தா அது இந்த மாதிரி ஒரு இனிமையான பானம் ஆகுது. அதை தனி தனியா பயன் படுத்துனா உடலுக்கு தீமை ஆகுது. அத புரிஞ்சு நாம தான் சரியா பயன்படுத்திக்கனும்" அவன் விளக்கம் அளித்தான்.

"ம்ம்! கரெக்ட் ஆன கெமிக்கல் ரி-ஆக்சன் நடந்தா ஒவ்வொரு பொருளோட பயணும் மாறும்! அத நல்லா தெரிஞ்சுக்கிட்டு யூஸ் பண்ணனும்னு சொல்லுறீங்க. கரெக்ட் தானே?" அவள் ஆர்வமாக கேட்க, "ரொம்ப சரி! இதாவது இவ்வளவு எளிமையா புரிஞ்சுக்கிட்டயே! சந்தோசம். இந்த கசாயத்த குடிச்சுட்டு வெளிய கொஞ்சம் காத்தார நில்லு. தலை வலி எல்லாம் சரியா போயிடும்" என்று கூறி விட்டு அவன் வெளியே சென்றான்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now