அத்தியாயம் - 7

7.7K 240 9
                                    

திரைச்சீலைகள் பனி காற்றில் அசைந்து அவள் முகத்தை மெல்ல வருட, அழகிய புன்னகையுடன் மாயா கண்கள் விழித்தாள். ஜன்னல் வழியாக சூரிய உதயத்தை பார்க்க அழகாக இருந்தது. சூரிய கதிர்கள் வேகமாக பரவி, வானம் பிரகாசமாக ஒளிவீச தொடங்கியது. மாயா அதை ரசித்துக்கொண்டு இருந்தாள்.

"மாயா எழுந்திட்டயா? சரி சீக்கிரம் குளிச்சுட்டு அந்த புது துணி உடுதிட்டு வா. குலதெய்வ கோவிலுக்கு போகனும்" வள்ளி பரிவுடன் கூறினார். சரி என்பது போல் தலை அசைத்து, குளியல் அறைக்குள் நுழைந்தாள் மாயா.

அழகிய வெளிர் நீல சுடிதார் அணிந்து அவளது நீண்ட மெல்லிய கைகளால் அவள் தலைமுடியை சரிசெய்து கொண்டிருந்தாள்.

"மாயா!" ஆர்வமாக வந்த மீனா அவளை ஆசையாக பார்த்தாள். "மாயா இந்த ப்ளூ சுடி உனக்கு ரொம்ப அழகா இருக்கு" என்று அவள் கன்னத்தை கிள்ளினாள். மாயா புன்னகைத்து விட்டு கூந்தலை பின்னளிட்டாள்.  மீனா அவள் எடுத்து வந்த முல்லை சரத்தை அவள் பின்னலில் சூடினால்.

"சரி வா போகலாம். அங்க எல்லாரும் காத்துட்டு இருக்காங்க" மீனா கூற, "சரி" என்று மாயா அவளுடன் நடந்தாள்.

"பூசைக்கு தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்து வச்சுட்டீங்களா?" வள்ளி வேலையாட்களை வினவ, அவர்கள் ஆம் என்பது போல் தலை அசைத்தனர்.

அனைவரும் சேர்ந்து குலதெய்வ கோவிலுக்கு புறப்பட்டனர். பெரியவர்கள் அனைவரும் ஒரு வண்டியில் செல்ல, சிறியவர்கள் மாறனுடன் சென்றனர். அஜய் வேண்டா வெறுப்பாக அவர்களுடன் அமர்ந்திருந்தான்.

மாயாவும் அவனை கண்டுகொள்ளாமல், மீனா மற்றும் மற்ற சிறுவர்களோடு சேர்ந்து மகிழ்ச்சியாக சிரித்து பேசிக்கொண்டு வருவதை பார்த்து மேலும் கடுப்பானான். அவன் அங்கு ஒரு வேண்டா விருந்தாளியாக அமர்த்திருப்பதை போல உணர்ந்தான். "இதுக்கு அம்மா கூடவே போய் இருக்களாம்" என்று மனதுக்குள் முணுமுணுத்தான்.

கோவிலை அவர்கள் அடைந்தனர், அந்த கோவில் மிக அமைதியான சூழலில் அமைந்திருந்தது. கருவறையில் இருந்த அம்மன் அழகாக காட்சி அளித்தார். குருக்கள் அவர்களை வரவேற்று புன்னகைத்தார். அனைவரும் மனமார அவர்கள் குலதெய்வத்தை வழிபட்டனர்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now