அத்தியாயம் - 36

7.2K 299 51
                                    

மழைச் சாரல் அவன் முகத்தை மென்மையாக வருடி செல்ல, மண் வாசனையும் சேர்ந்து அவன் மனதை மேலும் லேசாக்கியது. ஜன்னல் வழியாக மழையை ரசித்து பார்த்துக் கொண்டு இருந்தான் மாறன். அந்த அழகிய சூழலுக்கு ஏற்ற பாடல்களையும் கேட்டு ரசித்தவாறு நின்றிருந்தான்.

சிறிது நேரம் கழித்து, கதவு திறக்கும் ஓசைக் கேட்டு திரும்பினான். திரும்பியவன் அவள் முகம் பார்த்து மெய்மறந்து நின்றான். அகல் விளக்கை கையில் ஏந்தி, அவர்கள் அறைக்குள் நுழைந்தாள் மாயா. அந்த விளக்கின் சுடரொளியில் தேவலோக காரிகை போல் தெரிந்தாள் அவள்.

"கால்தடமே பதியாத கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்.!

கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்து மௌனத்தில் நின்றேன்..!!

ஒரு கரையாக அவள் இருக்க 
மறுகரையாக நான் இருக்க...

இடையில் தனிமை தழும்புதே நதியாய்..

கானல் நீரில் மீன் பிடிக்க
கைகள் நினைத்தால் முடிந்திடுமா.?

நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே..!!"

அவன் மனதின் வார்த்தைகளை உரைப்பதைப் போல பாடல் வரிகளும் அமைய, அந்த தருணத்தில் அவனை மறந்து அவள் முகம் பார்த்து நின்றிருந்தான்.

விளக்கை அங்கிருந்த மேசை மேல் வைத்துவிட்டு, அவனிடம் வந்து நின்றாள். "இந்த கிளைமேட் ரொம்ப நல்லா இருக்குல மாமா!" அவனுக்கு அருகாமையில் நின்றுக் கொண்டு அவள் கேட்க, அவன் செவிகளில் எதுவும் விழவில்லை.

"மாமா! மாமா...!" அவள் சற்று சத்தமாக அழைக்க, அவன் நினைவுக்கு வந்தான்.

"என்னாச்சு மாமா? கனவா?" அவள் கலகலவென சிரித்தாள். "ஆமா! கனவு தான்" அவன் புன்சிரிப்புடன் பதில் அளித்தான்.

"ஆஹான்! அப்படி என்ன கனவு? இப்படி நின்னுட்டே கனவு காணுறீங்க?" அவள் புருவம் உயர்த்தி வினவ, "கனவுல என்னோட தேவதைய பாத்தேன், அதான் நின்னுட்டு இருக்கறத கூட மறந்துட்டேன். எப்பவும் இந்த நேரத்துக்கு தூங்கிருவேன், அவ சரியா கனவுல வந்திருவா. இன்னிக்கு இவ்வளவு நேரம் ஆச்சு இன்னும் தூங்கல அதான் நின்னுட்டு இருக்கும் போதே வந்துட்டா" அவன் கள்ளச் சிரிப்புடன் பதில் அளித்தான்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Opowieści tętniące życiem. Odkryj je teraz