அத்தியாயம் - 29

7K 292 56
                                    

மாயா அவளுக்கு கொடுக்க பட்ட நேரத்தில் அனைத்து ஆடைகளையும் மிக அழகாக வடிவமைத்து இருந்தாள். மாறனும் வள்ளியும் அவளை பாராட்டினர்.

ஆடைகளை பார்த்துவிட்டு அவள் தோழி அவளை அழைத்திருந்தாள். "மாயா!!!" அவள் குரல் உற்சாகமாக ஒலித்தது. "மது! ட்ரெஸ் எல்லாம் பிடிச்சு இருக்கா?" மாயா ஆவலாக வினவ, "ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. ரொம்ப தேங்க்ஸ் மாயா! இவ்வளவு கம்மியான நேரத்துல இப்படி ஒரு படைப்ப நான் எதிர் பார்க்கவே இல்ல. தேங்க் யூ சோ மச்!" தோழியின் உற்சாகம் அவளையும் மகிழ்ச்சி அடைய வைத்தது.

"சரி! அத விட முக்கியமான விஷயம், நீயும் அண்ணாவும் கண்டிப்பா கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடியே வந்திடனும். நான் உங்களை எதிர்பார்த்துட்டு இருப்பேன்" மது கண்டிப்புடன் கூற, "நாங்க கண்டிப்பா வந்திருவோம்! கவலை படாதே!" என்றாள் மாயா குறுநகையுடன்.

அன்று மதியம் மாறனுக்கு மதிய உணவு எடுத்துக் கொண்டு கிளம்பினாள். வயலை அடைந்தவள் அங்கே மாறன் இல்லாததை கண்டு குழப்பமடைந்தாள். "வா மா! உன்னோட ஆடைகள் எல்லாம் ரொம்ப அழகா வடிவமைச்சிட்டனு மாறன் சொன்னான். வாழ்த்துக்கள் மா! நீ உன் துறையில இன்னும் மேல மேல வளரனும்" சங்கர் அவளை மனதார வாழ்த்தினான்.

"ரொம்ப தேங்க்ஸ் அண்ணா! ஆமா அவரு எங்க போயிட்டாரு?" அவள் கண்கள் மாறனை தேட, "அவன் கொஞ்சம் வேலையா டவுனுக்கு போய் இருக்கான் மா, இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திருவான். நீ சாப்பாடு வச்சிட்டு போ! அவன் வந்ததும் நாங்க சாப்பிட்டுகிறோம்" சங்கர் கூற, "அண்ணா எனக்கும் வீட்டுல இப்போ எந்த வேலையும் இல்ல. நானும் கொஞ்ச நேரம் இங்கேயே இருக்கேன்" அவள் கேட்க, அவனும் ஒப்புக்கொண்டு, அவன் வேலையை தொடங்கினான்.

"அண்ணா! நானும் இந்த வேலை எல்லாம் செய்யலாமா?" மாயா ஆர்வமாக கேட்க, சங்கர் அவளை ஆச்சர்யமாக பார்த்தான்.

"என்ன மா! நீயா இப்படி கேட்கிற?" அவன் ஆச்சரியத்தை வாய்விட்டு கேட்டுவிட, "ஆமா! அண்ணா. சொல்லுங்க நானும் இந்த வேலை எல்லாம் செய்ய முடியுமா?" அவள் மேலும் ஆர்வமாக வினவினாள்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now