அத்தியாயம் - 10

7.7K 267 48
                                    

பறவைகளின் கூச்சல் ஒலி மெல்லிசைப் பாடல்கள் போல அவள் காதில் விழ, குறும் புன்னகையுடன் கண்களைத் திறந்தாள் மாயா. ஒரு நிமிடம் தான் இருக்கும் இடம் அறியாமல் விழித்தாள், மறுகணம் அத்தை வீட்டில் இருப்பதை நினைவு கூர்ந்தாள். அயர்ந்து உறங்கியதால், அவள் சூழலை மறந்துவிட்டாள். அவள் அருகில் உறங்கிக் கொண்டிருந்த மீனாவை காணவில்லை, அதனால் அவள் தாமதமாக எழுந்துவிட்டோம் என்று உணர்ந்தாள்.

வெளியில் சென்றவள் வள்ளியின் குரல் கேட்டு அத்திசையில் நடந்தாள். "அத்தை! எல்லாரும் கோவிலுக்கு கிளம்பிடடாங்கலா?" அவள் சோம்பலாக கேட்க, "ஆமா டா தங்கம். நீ ராத்திரி தாமதமா வந்தே அதான் உன்ன எழுப்ப வேண்டாம்னு சொன்னேன்" அவர் கனிவாக கூறினார்.

"நானும் கிளம்பி போறேன் அத்த. இப்போ அசதி எதுவும் இல்ல" அவள் புன்னகைத்து கூறி விட்டு தன் அறைக்கு சென்றாள்.

மாறன் திருமணத்திற்கு மூன்று நாட்கள் இருந்த நிலையில், திருமண ஏற்பாடுகள் திறம்பட நடந்துக்கொண்டு இருந்தன. அன்று குலதெய்வ வழிபாடு இருந்தது. மாறனும் குடும்பத்தினரும் கோவிலுக்கு செல்ல, வள்ளி வீட்டில் இருந்து வரும் விருந்தினரை கவனித்து கொண்டு இருந்தாள்.

மாயாவும் விரைவாக தயாராகி கோவிலை அடைந்தாள். கோவிலில் சில சடங்குகள் முடிந்து அனைவரும் குலதெய்வத்தை மனதார வழிபட்டனர். மாயா முதல் முறையாக மாறன் வாழ்வு நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்.

அவர்கள் குடும்பத்தில் இந்த தலைமுறையின் முதல் திருமணம் என்பதால் அனைவரின் முகமும் அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. அனைவரும் தம்பதியின் இனிய திருமண வாழ்விற்காக வேண்டிக்கொண்டனர்.

பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து, வேறு சில வேண்டுதல்களையும் முடித்தனர்.

அன்றைய தினத்திற்கு பிறகு, மீனாட்சி அவனை சந்திக்க வேண்டும் என்று அவனை கேட்கவில்லை. அவனும் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவ்வபோது கைபேசியில் அவளுடன் பேசினான்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now