அத்தியாயம் - 34

7.1K 296 69
                                    

"இந்த வயசுல நீங்க எதுக்கு டா என்கூட கோவிலுக்கு வரனும். எனக்கு தான் வயசு ஆயிடுச்சு, கோவிலுக்கு போகணும்னு ஆசை படுரேன், நீங்க ரெண்டு பேரும் அத புரிஞ்சுக்காம பேசுறீங்க! இங்க பாரு மா, என் வயசுல இருக்க எல்லாரும் வராங்க, நல்லபடியா நாங்க எல்லாரும் சேர்ந்து போய்ட்டு வரோம்.

நீங்க ரெண்டு பேரும் எதுக்கும் கவலை படாதீங்க. மாறா! நீ மாயாவுக்கு சொல்லி புரிய வை!" வள்ளி உறுதியாக கூறினார். "அதுக்கு இல்ல மா" மாறன் எதோ சொல்ல நினைக்க, "நீ எதுவும் சொல்ல வேண்டும். நான் நாளைக்கு கிளம்புறேன் அவ்வளவு தான்" அவர் உறுதியாக இருக்க, மாறனால் அதற்கு மேல் மறுக்க முடிய வில்லை.

வள்ளிக்கு தேவையானவற்றை எடுத்து வைக்க மாயா உதவினாள். அவள் முகம் சோகமாக இருந்ததை வள்ளி கவனித்தார். "மாயா! எதுக்கு மா இப்போ முகத்தை இப்படி உம்முனு வச்சிருக்க?" அவர் அவள் முகம் பார்த்து கேட்க, "நீங்க தனியா அவ்வளவு தூரம் போறத நினச்சு தான் அத்த. மாமா இங்க இருக்கட்டும் நான் வேணும்னா உங்க கூட வரட்டுமா?" அவள் சோகமாக கேட்டாள்.

"என்ன பொண்ணு மா நீ, எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் நல்லபடியா போய்ட்டு வந்திருவேன். நீ அத நினச்சு கவல படாம, என் பையன நல்லபடியா பாத்துக்கோ. நீங்க ரெண்டு பேரும் போக வேண்டியது தேன்நிலவுக்கு. உன் புருசன் கிட்ட சொல்லி அதுக்கு எதாவது ஏற்பாடு செய்ய சொல்லு சரியா?

இந்த பாதை யாத்திரை, கோவில் குளம் எல்லாம் நாலஞ்சு பிள்ளைகள் பெத்ததுக்கு அப்புறம் போயிட்டு வருவீங்காளாம்" அவர் புன்னகையுடன் கூறி மாயாவை முகம் சிவக்க வைத்தார். அவள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், வெறுமனே தலை அசைத்தாள். வள்ளி அவள் முகம் பார்த்து புன்னகைத்தார்.

சிறு சிறு வீட்டு வேலைகளும், எளிதாக சமைக்க கூடிய உணவு முறைகளையும் மாயாவிற்கு கத்துக் கொடுத்தார் வள்ளி. மாயா அனைத்தையும் கருத்தாகக் கேட்டுக் கொண்டாள்.

மறுநாள் காலை வள்ளி கிளம்புகையில், "அம்மா பாத்து போய்ட்டு வாங்க! தினமும் போன் பண்ணுங்க" மாறன் சோகமாக கூற, "கவலை படாதே டா கண்ணா! நான் பாத்துக்கிறேன்" அவர் முழு மனதுடன் பதில் அளித்துவிட்டு இருவரிடமும் விடைபெற்று சென்றார்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now