அத்தியாயம் - 53

5.6K 226 50
                                    

"மாறா! டாக்டர் வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டாரு பா. வா வீட்டுக்கு போகலாம்" பூங்குழலி பாசமாக கூற, "பெரியம்மா! சங்கர் கார் வரவச்சுட்டான், நீங்க வீட்டுக்கு போங்க. மாமா கொஞ்ச நேரத்தில வீட்டுக்கு வந்துருவாரு. வினி ரொம்ப பயந்து போய் இருக்கா, நீங்க ரெண்டு பேரும் சண்ட போட்டு இன்னும் அவள பதட்டப் பட வைக்காதீங்க" மாறன் அவருக்கு எடுத்து கூறினான்.

"நீ எப்படி பா தனியா போவ?" அவர் வினவ, "நான் பாத்துக்கிறேன் அத்த. நீங்க கிளம்புங்க" அவன் அவர்களை அனுப்பி வைத்தான்.

அவர்களும் மருத்துவமனை விட்டு கிளம்பினர். மாறனும் ஒரு வண்டியை வரவழைத்து அவன் இல்லம் புறப்பட்டான். செல்லும் வழியில் மாயாவை பற்றியே சிந்தித்துக் கொண்டு இருந்தான். இவ்வாறு ஒரு நிலையில் அவனை கண்டால் அவள் மிகவும் வருத்தப் படுவாள் என்று தோன்றியது அவனுக்கு. காலையில் கிளம்பும்போது கூட அவள் பதட்டமாக இருந்தாளே என்று எண்ணினான், அவனுக்கு கவலையாக இருந்தது.

அதே எண்ணங்களுடன் வீட்டை அடைத்தான். அவன் வீட்டை அடைந்த பொழுது, நேரம் ஒன்பதை நெருங்கி இருந்தது.

விளக்குகள் எதுவும் போடப் படாமல் இருட்டாக இருந்தது அவன் இல்லம். அவன் அனைத்து விளக்குகளையும் போட்டு விட்டு, அவன் அறைக்கு சென்றான்.

அறை கதவு திறக்கும் ஓசைக் கேட்டு, மாயா வந்திருப்பது அவன் தான் என்று உணர்ந்து கொண்டாள். அவன் முகத்தை பார்க்காமல் வேறு புறம் திரும்பி படுத்திருந்தாள்.

அவன் அவள் அருகில் சென்று, கட்டிலின் ஒருபுறம் அமர்ந்தான். "மாயா!" அவன் அழைக்க, அவள் திரும்பவில்லை. "மாயா! என்ன பாரு" அவன் கூற, அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

"உன்னுடைய கோபம் எனக்கு புரியுது. ஆனா என்ன நடந்துச்சுனு கேளு" என்று கூறி, அவள் கரங்களை பற்றிக் கொண்டான். "கைய விடுங்க. நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். நான் எதையும் கேக்கல" அவள் அழுதிருப்பது அவள் குரலில் தெளிவாக தெரிந்தது.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now