அத்தியாயம் - 9

7.4K 232 27
                                    

நடப்பது அனைத்தும் கனவா இல்லை நனவா என்று தெரியாமல் அமர்ந்திருந்தான் மாறன். அன்று அவனது நிச்சயதார்த்தம். தனக்காக தன் அம்மா பார்த்த பெண் மீனாட்சி தான் என்று தெரிந்த நாள் முதல், அவன் தன்னிலை இழந்தான். அவன் சொந்தங்கள் அனைவரும் சூழ அவன் அவர்கள் மத்தியில் அமர்ந்திருந்தான்.

மயில் கழுத்து நிற பட்டு புடவையில் எளிய அலங்காரத்துடன் மல்லிகை மலர் சூடி அவர்கள் முன் வானத்து தேவதை போல் வந்து நின்றாள் மீனாட்சி.

"மாமா, கொஞ்சம் நிமிர்ந்து பாருங்க" மீனா அவனை சீண்ட, அவன் புன் முறுவல் புரிந்தான். சிறியவர்கள் அனைவரும் அவனை பரிகசிக்க, அவன் முகம் சிவந்தது. "அண்ணா வெக்க படுறாரு பாருங்க" வினித்தா கலவரமாக கூற, அனைவரும் சிரித்தனர். மாறனோ என்ன பேசவென்று தெரியாமல் மௌனமாக புன்னகைத்தான்.

மீனாட்சி அமைதியாக நின்று அமர்ந்திருந்த பெரியவர்களை வணங்கினால். "அத்தை கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோ மா" இளவரசு(மீனாட்சியின் தந்தை) கூறினார். அவள் தலை அசைத்து வள்ளியிடம் ஆசி பெற்றாள். அவள் தலையை வருடி, "நல்லா இருப்ப மா" என்று அவர் ஆசிர்வதித்தார்.

"அடுத்த மாதம் பதினைந்தாம் தேதி, வெள்ளி கிழமை நாள் ரொம்ப நல்லா இருக்கு. அப்போ திருமணத்தை வச்சுக்கலாம்" புரோகிதர் கூற இரு குடும்பத்தினரும் சம்மதித்தனர். மாறன் மனம் மகிழ்ச்சியில் நிறைந்தது.

அவன் மனதை வென்ற பெண் அவன் மனைவியாக வர போவதை எண்ணி உள்ளம் நெகிழ்ந்து போனான்.

இரு குடும்பத்து பெரியவர்களும் வெற்றிலை பாக்கு மாற்றி திருமணத்தை உறுதி செய்தனர்.

அவன் நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான். அவள் தன் விழிகளை தாழ்த்தி அமர்ந்திருந்தாள். அதுவே அவனை வெகுவாக கவர்ந்தது. எந்த ஒரு செயற்கை ஒப்பணையும் இன்றி தேவலோக ரதியாக அமர்ந்திருந்த அவளை விட்டு அகல அவன் விழிகள் மறுத்தன.

இமைக்காமல் அவள் முகம் பார்த்து ரசித்தான். "அப்பாடா! ஒரு வழியா மாமா அவரு வருங்கால மனைவி முகத்த ஏறெடுத்து பாத்துட்டாரு பா" மீனா கேலியாக கூறி பகபகவென சிரித்தாள். அவளோடு சேர்ந்து மற்றவர்களும் நகைத்தனர்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now