அத்தியாயம் - 51

6.6K 251 58
                                    

சூரிய ஒளி முகத்தில் பட, கண்களை சுருக்கி, சோம்பலாக விழிகளை திறந்தாள் மாயா. தன் கணவனின் அணைப்பில் உறங்கிக் கொண்டிருந்ததை உணர்ந்தாள். முந்தைய இரவின் நினைவுகள் அவள் மனதில் தோன்ற, முகத்தில் வெட்க புன்னகை பரவியது. மெதுவாக அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

நிம்மதியாக உறங்கி கொண்டிருந்த அவனின் முகம் பார்க்க அழகாக இருந்தது. அவனின் உறக்கம் கலையாமல், மெதுவாக அவன் அணைப்பில் இருந்து அவளை விடுவித்துக் கொண்டாள்.

குளித்து முடித்து வெளியில் வந்தவள் கடிகாரத்தை பார்த்தாள். மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. நேரம் ஆனதை உணர்ந்து, சமையல் அறைக்குள் நுழைந்தாள். அவனுக்காக தேநீர் போட்டு, எடுத்துக் கொண்டு அவர்கள் அறையை அடைந்தாள்.

மாறன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். மாயா தேநீர் கிண்ணத்தை கட்டில் அருகில் இருந்த ஒரு மேசையில் வைத்து விட்டு அவன் அருகில் அமர்ந்தாள். அவள் அருகில் அமர்ந்ததை உணர்ந்த மாறன் மெதுவாக புரண்டு படுத்து, அவன் கண்களை திறந்தான்.

ஈரக் கூந்தலை ஒரு துவாலை கொண்டு கட்டி இருந்தாள். முகம் முழுவதும் வெட்க புன்னகை பரவி இருக்க, அவனை பார்க்காமல் தரையை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

"டீ!" அவள் ஒற்றை வார்த்தையில் கூறி விட்டு அந்த இடத்தை விட்டு நகர நினைக்கையில், அவனின் கரங்கள் அவளை நகர விடாமல் இறுக்கமாக பற்றி இருந்தன.

"மாமா! கைய விடுங்க, எனக்கு கீழ நிறைய வேலை இருக்கு" அவள் சினுங்களுடன் கூற, "அதை ஏன் எங்கயோ பாத்துட்டு சொல்லுற? என்ன பாத்து சொன்னா தான் நான் நீ சொல்லுறதை கேட்பேன்" அவன் பிடி மேலும் இறுக்கமாக, மாயா நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

கயல் போன்ற விழிகளை உருட்டி அவள் அவனை பார்த்த போது, மற்ற அனைத்தும் மறந்து அவள் விழிகளில் தொலைந்து போனான். எழில் கொஞ்சும் அவள் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று அவன் மனதில் தோன்றியது, பார்வையை விலக்காமல் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Unde poveștirile trăiesc. Descoperă acum