அத்தியாயம் - 46

6.7K 267 70
                                    

"இப்போதான் எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு மாமா! எல்லா பிரச்சனையும் முடிஞ்சிருச்சு" மனதார கூறி, அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள் மாயா. மீனாவை டெல்லிக்கு அனுப்பி வைத்து விட்டு, மாறனும் மாயாவும் அன்று காலை தான் அவர்கள் ஊருக்கு திரும்பி இருந்தனர்.

"அப்புறம் மாயா, மீனா சிவா கல்யாணம் பத்தி யாருக்கும் தெரிய வேண்டாம். நம்மோட நெருங்கிய சொந்தக்காரங்களுக்கு கூட தெரிய வேண்டாம். தேதி முடிவு பண்ணிட்டு எல்லாருக்கும் சொல்லிக்களாம்" மாறன் கூற, மாயாவும் சம்மதித்தாள்.

"உங்களோட இந்த குணத்த பாத்து தான் முதல் முறை உங்க மேல காதல் வந்துச்சு மாமா" அவள் அவன் முகம் பார்த்து கூற, அவன் ஆச்சரியமாக அவள் முகம் பார்த்தான்.

"உங்களுக்கு ஞாபகம் இருக்கானு தெரியல, ஒருமுறை நீங்க ஒரு பொண்ணுக்கு உதவி செஞ்சீங்க, அவள ஒரு பையன் தொல்ல செய்யுறானு தெரிஞ்சதும், அவன் பெரிய இடத்து பையன், அவன கண்டிச்சா பிரச்சனை வரும்னு தெரிஞ்சும், அந்த பொண்ணுக்காக அவன கண்டிச்சீங்க.

அந்த நிகழ்வுக்கு அப்புறம் அந்த பொண்ணு உங்கள தேவமாவே பாக்க ஆரமிச்சுட்டா" மாயா அவள் மனதில் இருந்தவற்றை கூற, மாறனின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.

"ஹேய்! அது எப்படி உனக்கு தெரியும்?" அவன் அதே ஆச்சரியத்துடன் கேட்க,

"அந்த பொண்ணு என்னோட ப்ரெண்ட், நான் இங்க வந்தப்போ அத அவ என்கிட்ட சொன்னா. அந்த நிமிஷமே, உங்க மேல எனக்கு ரொம்ப பெரிய மரியாதை வந்துருச்சு. நீங்க என்னோட மனசுல ரொம்ப உயரத்துக்கு போயிட்டீங்க.

ஆனா, மறுநாள் கல்யாணம் ஆக போகுற உங்கள, வேற எந்த நினைப்போடவும் பாக்க கூடாதுனு தான் எனக்குள்ள எழுந்த அந்த உணர்வுகளை எனக்குள்ளேயே வச்சுகிட்டேன்" அவள் கூற,.

"என்ன இந்தளவுக்கு காதலிச்சவ, ஏன் கல்யாணம் ஆனப்போ என்ன சுத்தமா வெறுத்த?" அவன் புரியாமல் குழப்பத்துடன் கேட்டான்.

"என்னோட அப்பா மீனாவ உங்களுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க போறதா தான் சொன்னாரு. அதான், குழந்தை மாதிரி நினைச்ச பொண்ண எப்படி நீங்க கல்யாணம் செஞ்சுக்க சம்மதிச்சீங்கனு உங்க மேல எனக்கு கோபம் வந்துச்சு.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now