அத்தியாயம் - 59

Start from the beginning
                                    

அஜய் கண்களில் குற்ற உணர்வு வெளிப்படையாக தெரிந்தது. குற்றத்துக்கான தண்டனையும் பெற்று, அதை உணர்ந்து கொண்டவன் மீது வெறுப்பு காட்ட அவருக்கு மனம் வரவில்லை. அவரும் பூங்குழலியுடன் சேர்ந்து அவனை கவனித்துக் கொண்டார்.

நாட்கள் வேகமாக கழிந்தன,

மீனா சிவாவின் திருமண நாள் அன்று.

மலர்கள், வண்ண விளக்குகளால் அந்த இடம் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சிவா அவர்கள் திருமணம் மீனாவின் சொந்த ஊரில் நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால், பெரியவர்களும் அதை மனதார ஏற்றுக்கொண்டனர்.

மாறன் வீடு புதிதாக அலங்கரிக்கப் பட்டு, பார்பதற்கு சின்ன அரண்மனை போல் தெரிந்தது. அஜய் குணம் அடைந்து இருந்தான். அவன் செய்த தவறின் அடையாளமாக அவன் முகத்தில் தழும்புகள் மறையாமல் அவனுக்கு ஒவ்வொரு நாளும் அவன் தவறை எடுத்து உரைத்துக் கொண்டு இருந்தது.

அந்த நிகழ்வுக்கு பிறகு, அவனிடம் தெரிந்த மாற்றத்தை வைத்து, அவன் மனம் திருந்தி விட்டான் என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர். பெரிய மனதுடன் அவனை மன்னித்து ஏற்றுக் கொண்டனர். மீனாவுக்கு மட்டும் அவன் மீது இருந்த வெறுப்பு குறையவில்லை. அவன் மாறிய பொழுதும், அவன் செய்த தவறை அவள் மனம் ஏற்க்க மறுத்தது.

"அஜய்! நீ கிளம்பலையா?" பூங்குழலி கேட்க, "இல்ல மா! இந்த மாதிரி நல்ல காரியத்துல கலந்துக்குற தகுதியை நான் இழந்துட்டேன். நீங்க போயிட்டு வாங்க. நான் நம்ம வயல்ல கொஞ்ச நேரம் இருந்துட்டு வரேன்" அவன் சிறு புன்னகையுடன் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான். பூங்குழலியின் கண்கள் கலங்கின, தன் மகனுக்கு இப்படி ஒரு நிலை வரக் கூடும் என்று ஒரு நாளும் அவர் நினைத்துப் பார்க்கவே இல்லை.

மாறன், சங்கர் இருவரும் வரவேற்பில் நின்று வருபவர்களை வரவேற்றுக் கொண்டு இருந்தனர். சங்கர் மனம் படபடப்பாக இருந்தது. மீனாட்சி என்ன பதில் சொல்லக் கூடும் என்று எண்ணி அவன் மிகவும் படபடப்புடன் காணப் பட்டான்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now