அத்தியாயம் - 58

Start from the beginning
                                    

ராஜாராம் கஸ்தூரி சிறு பதட்டத்துடன் அந்த இடத்தை அடைந்தனர். ரோட்டில் அந்த நிலையில் கிடந்த அஜயை பார்த்து இருவருமே அதிர்ந்து போனார்கள். "அஜய்!" என்று அலறி, கண்களில் கண்ணீருடன் அவன் அருகில் சென்றார் கஸ்தூரி. "அஜய் கண்ண திறந்து பாரு பா!" கஸ்தூரி அவனை தோள் தொட்டு எழுப்பினார். அந்த தாயின் கவலையான முகம் அவன் மனதில் பதிந்தது. கீழே சிந்தி இருந்த அமிலம் அவர் கைகளை காயப் படுத்திய பொழுதும் அதை பொருட்படுத்தாமல் அவர் அவனை அரவணைத்தார்.

கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர், அவசர ஊர்தியை அழைத்து நிகழ்வை சொல்லி இருக்க, சரியான நேரத்தில் அதுவும் வந்து சேர்ந்தது. மீனா அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை, ராஜாராம் நிகழ்ந்தவற்றை யூகித்து விட்டார். அஜயை கஸ்தூரியும், ராஜாராமும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிவா மீனாவை அழைத்துக் கொண்டு அவர்கள் இல்லம் திரும்பினான். வழியில் மீனா எதுவும் பேசவில்லை.

மீனா, சிவாவின் முகத்தை பார்த்து ஏதோ நடந்திருப்பதை மாறனும் மாயாவும் புரிந்து கொண்டனர். என்ன நேர்ந்தது என்று சிவாவிடம் மாறன் வினவ, நடந்தவற்றை சிவா சொல்லி முடித்தான்.

அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தாள் மாயா. "இவ்வளவு பெரிய கொடுஞ்செயல் செய்ய அவனுக்கு எப்படி துணிவு வந்துச்சு. ஒரு பொண்ணு வாழ்க்கைய கெடுக்க நினைச்சு இருக்கான். மனுஷன் என்கிற எண்ணத்தை மறந்து இப்படி அரக்கன் மாதிரி நடந்துக்க அவனால எப்படி முடிஞ்சுது" என்று ஆதங்கமாக கூறி விட்டு மீனாவின் அருகில் அமர்ந்து கொண்டு அவள் தலையை கோதினாள் மாயா.

"உனக்கு எந்த காயமும் இல்லயே?" என்று கூறி அவள் கை, விரல்கள் அவற்றை பார்த்தாள். மீனா வெறுமனே தலை அசைத்தாள். "மீனு! அதான் எதுவும் நடக்கலையே! அப்புறம் ஏன் இவ்வளவு கவலையா இருக்க? அவன் செஞ்ச தவறுக்கான தண்டனை அவன் கையாலேயே அவனுக்கு கிடைச்சிருக்கு. நீ எதுக்கும் வருத்தப் படாத" மாயா அவள் கரம் பற்றி ஆதரவாக பேசினாள்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now