அத்தியாயம் - 53

Start from the beginning
                                    

"மாயா! நான் என்ன..." அவனை மேலும் பேச விடாமல், "நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். எந்த அளவுக்கு என்மேல அக்கறை இருக்குனு எனக்கு தெரிஞ்சிருச்சு. காலைல நீங்க கிளம்பும் போதே நான் எவ்வளவு தூரம் சொல்லி அனுப்பினேன், சீக்கிரம் வந்திருங்கனு. ஆனா நீங்க இவ்வளவு நேரம் கழித்து வந்திருக்கீங்க.

காலைல இருந்து எத்தனை முறை கால் பண்ணினேன், நீங்க ஒரு தடவை கூட எடுக்கவே இல்ல. சாயங்காலம் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்னு வருது. எனக்கு எவ்வளவு பயமா இருந்துச்சு தெரியுமா? இப்போ வரைக்கும் எனக்கு உயிரே இல்லாத மாதிரி இருந்திச்சு. உங்களுக்கு அதை பத்தி எல்லாம் ஒரு கவலையும் இல்ல" அவன் முகம் பார்க்காமல் அவள் அழ, என்ன செய்வதென்று தெரியாமல் மாறன் அமர்ந்திருந்தான்.

"என்ன கொஞ்ச நேரம் தனியா இருக்க விடுங்க" அவள் கூற, அவன் அறையில் இருந்து வெளியேறினான். அவன் சென்ற பின், எழுந்து அமர்ந்தவள் மேலும் அழுதாள்.

கீழே சென்ற மாறன், சமையல் அறையை பார்த்து அவள் இன்று எதுவும் சமைக்கவில்லை என்று தெரிந்து கொண்டான். "காலைல இருந்து எதுவும் சாப்பிடாம இருந்திருக்கா" என்று எண்ணி, அவளுக்காக பால் காய்ச்சி எடுத்துக் கொண்டு அவர்கள் அறைக்கு வந்தான்.

"மாயா!" அவன் அழைக்க அவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். பார்த்தவள் அதிர்ந்தாள். "மாமா! உங்களுக்கு என்ன ஆச்சு?" அவள் பதட்டமாக அவன் அருகில் வந்தாள். "ஒன்னும் இல்ல! பதட்டப் படாதே" அவன் கூறிக் கொண்டு இருக்கும் போதே, அவள் மயங்கி கீழே விழுந்தாள்.

"மாயா! மாயா!" அவன் அவள் முகத்தில் தண்ணீர் தெளித்தான். சிறிது நேரம் கழித்து மாயா கண் விழித்தாள். "மாமா! உங்களுக்கு என்ன ஆச்சு?" அவள் கண்களில் கண்ணீருடன் கேட்க, "அழாத டா, எனக்கு ஒன்னும் இல்ல. இது ரொம்ப சின்ன காயம் தான். சீக்கிரம் சரி ஆயிடும். நீ இதுக்காக வருத்தப் படாத" மாறன் அவளை சமாதானம் செய்ய முற்பட்டான்.

"காலைல நீங்க கிளம்பும் போதே கொஞ்சம் கவனமா இருங்கனு சொன்னேனே மாமா! இன்னிக்கு நீங்க எங்கேயும் போகாம வீட்டிலேயே இருந்து இருக்கலாம்" அவள் கண்ணீர் மேலும் பெருகியது.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now