அத்தியாயம் - 44

Start from the beginning
                                    

"மாமா! நீங்க எதுக்கு இவ்வளவு பதட்டப் படுறீங்க. எல்லாமே நல்லாதாவே நடக்கும். என்ன நம்புங்க" அவள் அவன் கரங்களை பற்றி நம்பிக்கையாக கூற, அவனுக்கும் அது ஆறுதலாக இருந்தது.

"அது இருக்கட்டும் கோவில்ல ஏதோ சொன்னீங்களே?" அவள் முகபாவனை மாற, அவனுக்கு சிரிப்பு வந்தது. "என்ன சொன்னேன்?" அவன் தீவிரமாக யோசிபதை போல் பாவனை செய்ய, "இங்க எதுக்கு வந்தீங்கனு ஏதோ சொன்னீங்களே!" அவள் ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டாள்.

"ஆமா! ஆமா! அதான் சொன்னேனே தேவாவ பாக்க வந்தேன்னு" அவன் சிரிப்புடன் பதில் அளிக்க, "ஓஹோ! அதுக்காக தான் நான் கிளம்பின அடுத்த நிமிஷமே கிளம்பி வந்து, நான் வெளிய வர வரைக்கும் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தீங்களா?" அவள் அவன் முகத்திற்கு மிக அருகாமையில் சென்று வினவ, அவனுக்குள்ளும் சிறு படபடப்பு ஏற்ப்பட்டது.

"அது என்ன ஒரே நாள்ள அவ்வளவு காதல்?" அவன் முகத்தின் அருகில் சென்று அவன் கலைந்திருந்த கேசத்தை அவள் கரங்களால் சரி செய்ய, அவன் வாயடைத்து போய் அவள் முகம் பார்த்து நின்றிருந்தான்.

"என்ன? பதிலயே காணோம்!" அவள் மீண்டும் கேட்க, அவன் பேச வார்த்தைகள் அற்று நின்றான். காரிருள் சூழ்ந்திருந்த வேளையில் முழுமதி போன்ற அவள் முகத்தை பார்த்த தருணத்தில் அவன் வாயடைத்து போனான். ரதியாய் அவன் அருகில் நின்றிருந்தவளிடம் இருந்து அவன் பார்வையை விளக்க, அவன் விழிகள் மறுத்தன.

"நைட் ஃபுல்லா இப்படியே பேசாம இருக்கலாம்னு நினச்சீங்களா? இன்னிக்கு பதில் சொல்லாம உங்கள விடுறதா இல்ல" அவள் கறாராக பேச, "அப்படி என்ன தெரிஞ்சுக்கணும் மேடம்" அவன் அவளை அவன் கைச்சிறையில் வைத்தவாறு வினவினான். அவன் ஸ்பரிசத்தில் மாயாவின் முகம் நாணத்தால் சிவந்தது.

"அதான் சொன்னேனே, அப்படி என்ன என் மேல திடீர் காதல்?" அவள் பேச்சில் தடுமாற்றம் தெரிந்தது.

"அத நான் சொல்லுறேன், அதுக்கு முன்னாடி நீ சொல்லு. உனக்கு எப்போ என் மேல காதல் வந்துச்சு? உனக்கு என்ன பிடிக்காதுனு எனக்கு தெரியும். ஆரம்பத்துல நீயும் அப்படிதான் இருந்த, ஆனா அதெல்லாம் எப்படி நீ மறந்து என்ன நேசிக்க ஆரம்பிச்ச?

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now