அத்தியாயம் - 36

Start from the beginning
                                    

"ஓஹோ! கனவுல தேவதையா! யாரு அது?" அவள் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு கேட்க, "அதெல்லாம் உனக்கு தெரியாது. அவள கனவுல பாக்க நேரம் ஆச்சு நான் தூங்குறேன், நீயும் சீக்கிரம் தூங்கு. குட் நைட்" அவன் விளையாட்டாக கூறிவிட்டு படுக்கையில் படுத்துக் கொண்டான்.

"தேவதையாம் தேவதை" அவள் உறங்கிய அவனை முறைத்து விட்டு, வேறுபுரம் திரும்பி படுத்துக் கொண்டாள். வெகுநேரம் தூங்காமல் அவன் பேசியதை நினைத்து பார்த்தாள். பின் கண்ணயர்ந்தாள்.

மறுநாள்,

அவன் கண் விழிக்கும்போது அவன் முதலில் பார்த்தது அவள் முகமே. "தேவதை!" உறங்கிக் கொண்டு இருப்பவள் முகம் பார்த்து கூறிவிட்டு அவள் முகத்தில் படர்ந்திருந்த கூந்தலை மென்மையாக ஒதுக்கி விட்டான். அவள் கண்களில் அசைவு தெரிய என்ன செய்வது என்று தெரியாமல் கண்களை மூடி தூங்குவது போல் படுத்துக் கொண்டான்.

மெதுவாக கண்களை திறந்தாள் அவள். சோம்பல் முறித்து திரும்பியவள் அவன் உறங்கிக் கொண்டு இருப்பதை பார்த்தாள். அவன் முகத்திற்கு முன் விரல்களால் சொடுக்கு போட்டு பார்த்தாள். அவனிடம் எந்த ஒரு அசைவும் தெரியாமல் இருக்க, அவன் நன்றாக உறங்குகிறான் என்ற முடிவுக்கு வந்தாள்.

"கனவுல தேவதையா? இங்க பாருங்க மாமா! என்ன தவிர வேற பொண்ண பத்தி நீங்க கனவுளையும் யோசிக்க கூடாது!! புரியுதா???" அவன் முகத்தை பார்த்து அவள் பேசிக் கொண்டு இருக்க, அவனுக்கு சிரிப்பு வந்தது, மிகவும் சிரமபட்டு அதை அடக்கிக் கொண்டான்.

"ஆனாலும் உங்க மேல எனக்கு கோபமே வர மாட்டேங்குது. தூங்கும் போது கூட, முகத்துல இந்த புன்னகை இருந்துட்டே இருக்கு! தூங்கும் போது கூட என் மாமா ரொம்ப ரொம்ப அழகு" என்று கூறி அவன் கன்னத்தை கிள்ளி இதழில் வைத்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்து வெளியில் சென்றாள்.

அவள் சென்றதும், அவன் கண் விழித்தான். "அழகி!" புன்னகையுடன் அவள் சென்ற திசையை பார்த்துக் கொண்டே  எழுந்தான்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now