அத்தியாயம் - 35

Start from the beginning
                                    

"இப்போ நான் எதை புரிஞ்சுக்கலைனு சொல்லிட்டு போறாரு" அவன் சென்ற திசையை குழப்பமாக பார்த்தாள்.

"மாமா! மதியம் சாப்பிட்டீங்களா?" அவள் வருத்தமாக கேட்க, "சாப்பிட்டேன். கவலப் படாதே" அவன் புன்னகையுடன் பதில் அளித்தான்.

"சரி இப்போ என்ன சமைக்கட்டும்?" அவள் ஆர்வமாக கேட்க, "உனக்கு சமைக்க தெரியுமா?" அவன் ஆச்சர்யமாக கேட்டான். "நேத்து அத்த ஈசியா சமைக்க சில டிஷ் சொல்லிக் கொடுத்தாங்க. நான் அத சமச்சு தரேன்" அவள் பெருமையாக பதில் அளித்தாள்.

"அப்படி என்ன ஒரு நாள்ல கத்துக் கொடுத்தாங்க?" அவன் சந்தேகமாக கேட்க, "உப்மா!" அவள் கண்கள் பளிச்சிட பதில் அளித்தாள். "என்னது உப்மா வா?" அவன் அதிர்ச்சி அடைந்தான். "ஏன்?" அவள் புரியாமல் கேட்க, "அம்மா! என்ன பழிவாங்க நீங்க இப்படி ஒரு ஏற்பாடு செஞ்சு வச்சிருக்கீங்கலா?" அவன் மனதில் எண்ணிக்கொண்டு, "எனக்கு உப்மா பிடிக்காது. நாம வேற எதாவது சமைக்கலாம்" அவன் பதில் அளித்தான்.

"ஓ! உங்களுக்கு உப்மா பிடிக்காதா? அப்புறம் ஏன் அத்தை அத எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க? ஆனா அது ஈசியா இருந்துச்சு" அவள் கவலையாக கூற, "ஒன்னும் கவல படாத! நான் சமைக்குறேன் நீ வந்து பாரு" என்று அவளை அழைத்துக் கொண்டு சமையல் அறைக்குள் நுழைந்தான்.
.
.

டெல்லி,

"அஜய்! நீ இங்க எப்படி?" மீனா எதிரில் அமர்ந்திருந்த அஜயை பார்த்து ஆச்சர்யமாக கேட்டாள். "இங்க ஒரு பிராஜக்ட் வேலையா வந்தேன் மீனா. நீ இங்க தான் இருக்கேன்னு தெரியும் அதான் உன்ன பாத்துட்டு போகலாம்னு வந்தேன்" அவன் இயல்பாக பதில் அளித்தான்.

"சரி! வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா? வினிதா?" அவள் கேட்க, "எல்லாரும் நல்லா இருக்காங்க. அப்புறம் என்ன மன்னிச்சிடு! நான் உங்க அப்பாக் கிட்ட அப்படி நடந்திருக்க கூடாது" அஜய் மேலும் பேசும் முன், "அந்த விஷயத்துல எனக்கு ரொம்ப வருத்தம் தான். அவ்வளவு சீக்கிரம் அத மன்னிக்கவும் முடியாது. மாயா நீ மாறிட்ட வருத்த படுறேனு சொன்னா, அதான் நான் உன்ன கஷ்டப்படுத்த வேண்டாம்னு இப்போ பேசிட்டு இருக்கேன்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now