அத்தியாயம் - 34

Start from the beginning
                                    

"மாயா! நீ வீட்ல தனியா இருந்துப்பயா?" அவன் கவலையாக அவளை வினவினான். "இருந்துப்பேன் மாமா! ஆனா இன்னிக்கு எனக்கு எந்த வேலையும் இல்ல. தனியா இருக்க போர் அடிக்கும். என்னையும் உங்களோட கூட்டிட்டு போறீங்களா?" அவள் ஆர்வமாக கேட்க, அவன் புன்னகையுடன் சம்மதித்தான்.

"இன்னிக்கு பனமரத்துல பதநீர் இறக்குவாங்க அங்க கொஞ்சம் போகனும். நீயும் அங்க வரியா?" அவன் கேட்க, "ம்ம்! வரேன் மாமா" என்று கூறி அவனுடன் சென்றாள்.

"பதநீர்னா என்ன மாமா?" மாயா புரியாமல் கேட்க, "பனை மரத்தில இருந்து கிடைக்குற உணவுப் பொருள்களில பதநீர் முதன்மையானது. இதுதான் கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. இது எல்லாம் உடலுக்கு ரொம்ப நல்லது" மாறன் பனை மரத்தின் பயன்களை சொல்ல, அவள் ஆர்வமாக கேட்டுக் கொண்டாள்.

"எப்படி மாமா! எல்லா விஷயமும் இப்படி பிங்கர் டிப்ல வச்சிருக்கீங்க? உங்கள பாத்தா எனக்கு ரொம்பவும் ஆச்சரியமா இருக்கு?" மாயா விழி விரிய கூறினாள்.

"நான் படிச்சது எம்.எஸ்.சி. அக்ரி, எனக்கு இந்த செடிகள் மேல ஆர்வம் வந்துதான் படிச்சேன், ஆனா இந்த மாதிரி பயன்கள் எல்லாம் எனக்கு என்னோட அம்மா தான் முதல் முறையா சொல்லி கொடுத்தாங்க. அப்போதான் இதுல எனக்கு ரொம்ப ஆர்வம் வந்துச்சு" அவன் அவள் கேள்விக்கு விளக்கம் அளித்தான்.

"சூப்பர் மாமா! ஆனா நான் இது எதையும் தெரிஞ்சிக்க முயற்சி செஞ்சதே இல்ல! புதுசு டிரெண்ட்னு எனக்கு புதுமையா தோனுறத மட்டும் தான் செய்வேன். அதான் எனக்கு நம்ம ஊர் பத்தி எதுவும் தெரியாம போயிருச்சு" அவள் உதட்டை பிதுக்கி கூற, அவனுக்கு சிரிப்பு வந்தது.

"அது எல்லாம் பெரிய விஷயம் இல்ல, இங்க தானே இருக்க போற, போக போக எல்லாம் கத்துக்குவ! கவலை படாதே!" என்றான். அவளும் தலை அடைத்துவிட்டு வயல் வெளிகளை ரசித்துக் கொண்டே அவனுடன் பயணித்தாள்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now