பொறுமையை இழந்த அர்ஜுன் "தாரா! தாரா!" என்று கத்திக்கொண்டே நர்ஸை மீறி உள்ளே நடந்தான்.

இவன் போடும் சத்ததைக்கேட்டு வந்த  இரண்டு பெண்கள்... "அர்ஜுன் சார், நீங்க என்ன பண்ணறீங்க இங்க? தாரா எங்க ஃப்ரெண்ட் தான். சொல்லுங்க." என்றார்கள்.

"நான் அவள இப்போ உடனே பார்க்கணும்." என்றான் கண்களை உருட்டிக்கொண்டு.

"வாங்க, நான் அவ ரூம்கு கூப்பிட்டு போறேன்." என்று அழைத்துச் சென்றாள் ஒருத்தி.

இவன் உள்ளே நுழையும் போது, இன்னொரு ஆணுடன் சிரித்து பேசிக்கொண்டு இருந்தாள் தாரா.
இதைப்பார்த்த அர்ஜுனுக்கு ஏனோ  கடுப்பாகியது.

அர்ஜுனைப் பார்த்த தாரா... "நீ என்ன பண்ணிட்டு இருக்க இங்க?" என்று அவனை முறைத்தாள்.

"ஹும்! உன்ன கூப்பிட்டு போகலாம்'னு வந்தேன். வா போகலாம்." என்றான் தாராவின் அறையை சுற்றி முற்றி பார்த்துக்கொண்டு.

"தாரா பேபி, யாரு இது?" என்று கேட்டான் அவளுடன் சிரித்து பேசிக்கொண்டு இருந்த பிரசன்.

"என்னது பேபி'ஆ? வாய உடச்சிடுவேன். இனிமே இப்படி அடைமொழி வெச்சு கூப்பிடறத எல்லாம் நிறுத்திக்கோ." என்றான் அர்ஜுன் தன் ஒற்றை விரலை நீட்டி.

"ஏய், என் ஹாஸ்பிடல் வந்து என்னையே மிரட்டற. யாரு நீ?" என்று பதிலுக்கு முறைத்தான் பிரசன்.

"பிரசன், இது தாராவோட கணவர் அர்ஜுன். அதான் இவரு டென்ஷன் ஆகிட்டாரு. நீ எதுவும் தப்பா நெனச்சுக்காத." என்று அர்ஜுனை புரியாமல் பார்த்த பிரசனிடம் சொன்னாள் நந்தினி.

"அய்யோ! தாரா மா, உனக்கு கல்யாணம் ஆகிருச்சா? சொல்லவே இல்ல." என்றான் பிரசன், ஒரு ஏமாற்றத்துடன்.

"சொல்றதுக்கு ஒன்னும் இல்ல பிரசன். நீ ஃபாரின்ல இருந்ததுனால உன்ன காண்டாக்ட் பண்ண முடியல. உன் அப்பாக்கூட வந்தாரு எங்க கல்யாணத்துக்கு." என்றாள் அர்ஜுனை முறைத்த வண்ணம்.

காதலும் கடந்து போகும்💘Unde poveștirile trăiesc. Descoperă acum