அத்தியாயம் - 22

Começar do início
                                    

"மாயா நீ ரொம்ப குடுத்து வச்சவ டி. இப்படி ஈகோ இல்லாத கணவன் எத்தனை பேருக்கு கிடைப்பாங்க சொல்லு. எனக்கு தெரிஞ்சு எந்த ஆம்பளையும் தன்னோடு ஈகோவ எப்பவும் விட்டுக் கொடுக்க மாட்டாங்க. அந்த வகையில மாறன் அண்ணா ரொம்ப கிரேட். நீ ரொம்ப ரொம்ப லக்கி" சுமி உற்சாகமாக கூற, மாயா எதுவும் பேசாமல் அவன் சென்ற திசையையே ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டு இருந்தாள்.

சுமி கூறியது அவள் மனதும் உரைத்தது. அவன் மீது கோபம் ஒருபுறம் இருந்தாலும் அதை மீறி தனி மரியாதையும் உண்டானது.

மூவரும் சேர்ந்து மதிய உணவை உட்க்கொண்டனர். "அண்ணா நிஜமாவே உங்க சமையல் சூப்பர். இவ்வளவு டேஸ்டா நா சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு" என்று அவனை பாராட்டினாள் சுமி. அவனும் சிரித்துக் கொண்டே சாப்பிட, மாயா அவன் முகம் பார்த்து மேலும் ஆச்சரியப்பட்டாள்.

"சரி மாயா நான் கிளம்புறேன். நீ உடம்ப பாத்துக்கோ, அப்படியே எக்ஸாம்க்கு நல்லா பிரிப்பேர் பண்ணு. நா போய்ட்டு வரேன்" மாயாவிடம் விடை பெற்று மாறனிடமும் விடைபெற்று கொண்டு கிளம்பினாள் சுமி.

"சமையல் எப்படி கத்துகிட்டீங்க?" அவள் ஆர்வமாக அவனை பார்த்தாள். "அம்மா சமைக்கும் போது பக்கத்துல இருந்து கவனிச்சிருகேன். அப்பப்போ அம்மாவே கூப்பிட்டு சொல்லி தருவாங்க" அவன் புன்னகையுடன் பதில் அளித்தான்.

"ஓ!!" அவள் விழிகள் விரிந்தன, "உனக்கு சமைக்க தெரியாதா?" அவன் எதார்த்தமாக கேட்க, "சமையலா! அதெல்லாம் தெரியாது. அம்மா சமச்சு வச்சா நல்லா சாப்பிடுவேன்" அவள் சிரித்துக் கொண்டே பதில் அளித்தாள், "பாத்தாலே தெரியுது!" என்று மனதுக்குள் எண்ணி அவனும் அவளுடன் சேர்ந்து நகைத்தான்.

"சரி இப்போ கால் வலி இருக்கா?" அவன் அக்கறையுடன் வினவ, "இப்போ பரவா இல்ல" அவள் விடையளித்தாள். "சரி நீ கொஞ்சம் ஓய்வெடு நான் நைட்க்கு சமைக்குறேன்" அவன் சமையல் அறைக்கு செல்ல, "எனக்கும் போர் அடிக்குது, நானும் வரேன்" என்று கூறி அவனுடன் நடந்தாள்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Onde histórias criam vida. Descubra agora