அத்தியாயம் - 19

Start from the beginning
                                    

அவள் தூக்கத்தில் அவன் கரங்களை பற்றி இருந்தது புரிந்தது. அவன் கையை தன் கரங்களுக்குள் சிறை வைத்து விட்டு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தவளை பார்க்க அழகாக இருந்தது. சிலக் கணங்கள் என்ன செய்யவதென்று தோன்றாமல் அவள் அருகிலேயே அமர்ந்துக் கொண்டான்.

இப்பொழுது கைகளை எடுத்தால் அவள் உறக்கம் கேட்டு விடும் என்று எண்ணி, அவளாக விடுவிக்கும் வரை அவ்வாறே அமர்ந்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்து அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.

இரவு வெகுநேரம் ஆகியும் அவள் அவன் கரத்தை விடுவிக்கவில்லை. ஒரு சமயம் ஜன்னல் வழியே வந்த பனி காற்று அவள் சிகையை கலைத்து அவள் உறக்கத்தை தொந்தரவு செய்ய, அவன் தன் இன்னொரு கரத்தினால் அதனை மெல்ல விலக்கி அவள் உறக்கம் கலையாமல் பார்த்துக் கொண்டான்.

வெகு நேரம் கழித்து அவள் இன்னொரு புறம் புரண்டு படுக்கையில், அவன் கரத்தை விடுவித்தாள், அவனும் புன்னகைத்து விட்டு போர்வையை அவளுக்கு போர்த்திவிட்டு விட்டு அறையில் இருந்து வெளியில் சென்றான்.

சூரிய ஒளி அவள்மீது விழ, கண்களை கசக்கிக் கொண்டு சோம்பலாக விழித்தாள் மாயா. இயல்பாக சோம்பல் முறித்துவிட்டு எழுந்தவள் தான் கட்டிலில் இருப்பதை உணர்ந்து ஆச்சர்யத்தில் விழிகளை உருட்டி அறை முழுவதும் சுற்றி பார்த்தாள்.

"எப்படி இங்க வந்தோம்? ஜன்னல் பக்கத்துல தானே இருந்தோம்? அப்புறம் எப்படி?" இரவு நடந்ததை நின்விற்கு கொண்டு வர எண்ணினால். ஆனால் அவளுக்கு கட்டிலில் படுத்த நினைவே இல்லை.  "அச்சச்சோ!! தூக்கத்தில நடக்க ஆரமிச்சுட்டோமா🙄?" என்று எண்ணிக் கொண்டு அறையில் இருந்து வெளியில் சென்றாள். அங்கும் யாரும் தென்படவில்லை எனவே அவளாக தான் இரவு கட்டிலில் படுத்தாள் என்று எண்ணி மனதை தேற்றி கொண்டு மற்ற வேலைகளை கவனித்தாள்.

மீனா முந்தைய நாள் போல் இல்லாமல் இயல்பாக இருப்பதை பார்த்து மனம் மகிழ்ந்தாள். "மீனா! இப்போ உடம்புக்கு எப்படி இருக்கு?" மாயா பறிவாக கேட்க, "நல்லா இருக்கேன் மாயா. கொஞ்சம் குழப்பமா இருந்தேன் மாமா என் குழப்பத்தை தீர்த்துட்டாரு. அத்தோட என் தலைவலியும் போயிருச்சு" அவள் மனதார கூற, மாயா புன்னகைத்தாள். "உன்ன இப்படி சந்தோசமா பாக்க எவ்வளவு நல்லா இருக்கு தெரியுமா? நீ இப்படியே இரு, இதுதான் அழகு" என்று கூறி அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now