அத்தியாயம் - 16

Depuis le début
                                    

"டேய் மாப்பிள, ஏன் டா வயல் பக்கம் வரல ரெண்டு மூணு நாளா? உடம்பு சரியில்லைனாலும் நீ வயலுக்கு வராம இருக்க மாட்ட, இப்போ என்னாச்சு உனக்கு?" வருத்தத்துடன் வினவினான் சங்கர்.

"இல்ல டா, எனக்கு மனசு சரி இல்ல. என்னால வயலுக்கு வந்தாலும் வேலை செய்ய முடியாது அதான் வரல" என்றான்.

"உன்ன இப்படி பாக்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு டா. யாருக்கு எந்த பிரச்சனை வந்தாலும் நீதான் தீர்வு சொல்லுவ, இப்போ நீ இப்படி இடிஞ்சு போய் இருக்கிறத என்னால பாக்க முடியல டா. இன்னும் மீனாட்சிய மறக்க முடியாம நினைச்சுட்டு இருக்கயா?" அவன் தயக்கத்துடன் கேட்க,

"எப்போ நான் மாயா கழுத்துல தாலி கட்டினேனோ, அப்போவே என் மனசுல இருந்த எல்லா எண்ணங்களையும் தூக்கி எறிஞ்சுட்டேன் டா. எனக்கு ஒரு பொண்ண பிடிச்சு இருந்துச்சு, எப்போ அந்த பொண்ணுக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லைனு தெரிஞ்சுச்சோ அப்போவே அந்த எண்ணத்தை என் மனசுல இருந்து அழிச்சுட்டேன்" என்று மாறன் உறுதியாக கூற, சங்கருக்கு நிம்மதியாக இருந்தது. எங்கே மீனாட்சியை எண்ணி வருந்துகிறானோ என்று எண்ணி வருந்தி கொண்டு இருந்தான்.

"ஆனா அந்த பொண்ணு அத முன்கூட்டியே சொல்லி இருக்கலாம் டா. அப்படி சொல்லி இருந்தா இன்னொரு பொண்ணு வாழ்க்கை இப்படி கேள்வி குறி ஆயிருக்காது?" வருத்தமாக கூறினான்.

"ஒருவேள இத சொல்ல தான் உன்ன கோவிலுக்கு வர சொல்லுச்சோ?" சங்கர் குழப்பமாக கேட்க, "ஆமா டா, அப்போ நாம சரியான நேரத்திக்கு போய் இருந்தா இது இவ்வளவு தூரம் வந்திருக்காது. ஆனா ஏன் அந்த பொண்ணு இன்னொரு தடவ என்கிட்ட அத சொல்ல நினைக்கல?" அவன் வினவ, "எனக்கும் அதுதான் தெரியல டா, இது மறைக்குற அளவுக்கு சின்ன விஷயம் இல்லயே. அத சொல்லனும்னு நினைச்சு இருந்தா கண்டிப்பா சொல்லி இருக்கலாம்" என்று அவனும் மாறன் எண்ணியதையே கூறினான்.

"வேற என்ன நெனச்சு டா நீ இவ்வளவு சோகமாக இருக்க? நான் நீ இன்னும் மீனாட்சிய நினைச்சுட்டு இருக்கனு நெனச்சேன். ஆனா நீ இப்போ பேசுனத வச்சு அது இல்லைனு தெளிவா புரிஞ்சிருச்சு. வேற என்ன டா உனக்கு பிரச்சன" என்று சங்கர் குழப்பமாக வினவினான்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Où les histoires vivent. Découvrez maintenant