அத்தியாயம் - 5

Start from the beginning
                                    

சிலப்பதிகார கதையை சுருக்கமாக சொல்லி முடித்தார் வள்ளி. மாயா அவள் விழிகள் விரிய வியப்பாக அதை கேட்டு கொண்டு இருந்தாள்.

"கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர், அதே மாதிரி ஒரு பொண்ணு நினைத்தால் எதை வேண்டுமானாலும் சாதிப்பா.

கண்ணகியும் அதே மாதிரிதான் தப்பான வழியில போன கணவன தன் அன்பாலயே திருத்தினா.

பெண்ணுக்கு பொறுமை இருந்தா அவ எதையும் சாதிப்பா. கண்ணகியும் அவ கணவன திருத்தினா.

அதே போல, அவ கோபப்பட்டா அது அந்த இடத்தையே அழிச்சிடும். இதுதான் பெண்களோட சக்தி. நீ நினைக்கிற மாதிரி பெண்கள் அடிமையா இல்ல. அவுங்க திறன் அவர்கள் உணரதான் இந்த மாதிரி காப்பியங்கள் எழுத பட்டுச்சு" என்று பெருமையாக முடித்தார் வள்ளி.

"சூப்பர் அத்தமா, கதை நல்லா இருந்துச்சு. நீங்க சொன்னது ரொம்ப சரி" என்று ஒப்புக் கொண்டாள் மாயா.

"மீனா சொல்லுவா, தமிழ்ல எல்லாமே நல்லா இருக்கும் பாடல், கதை, செய்யுள்ளா சொல்லிட்டு இருப்பா. எனக்கு என்னவோ அது படிக்கணும்னு தோணவே இல்ல. அப்புறம் அங்க தமிழ் ஸ்கூல் கம்மிதான். மீனா தேடி பிடிச்சு ஒரு ஸ்கூல்ல சேர்ந்தா" என்றாள் மூச்சுவாங்க.

"எல்லாருக்கும் எல்லாம் எடுத்த எடுப்புல பிடிக்காது மா, ஒரு நாள் அதோட அருமை தெரியும் போது எல்லாரும் கண்டிப்பா அதை தேடி போவாங்க" என்று முடித்தார் வள்ளி.
.
.
.
"மாயா இன்னிக்கி சித்தி, பெரிய அத்தை, எல்லாரும் வராங்க" மீனா ஆர்வமாக கூற, "ஜாலி!!" என்று மாயா உற்சாகம் அடைந்தாள்.

அன்று மதியம் அவர்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர். "அக்கா!!" ரேணு ஆசையாக அவர்களிடம் வந்தாள். ரேணு அவர்கள் சித்தி மகள். எட்டாம் வகுப்பு படிக்கும் அவள்தான் அந்த வீட்டு கடைக்குட்டி. மீனா, மாயா மீது அதிக பாசம் கொண்ட குழந்தை.

மாயாவும் மீனாவும் அவளை அணைத்து கொண்டனர். "மீனு மா.. மாயா குட்டி" என்று உற்சாகமாக வந்தான் ரமேஷ், ரேணுவின் அண்ணன், அவனும் ஆசையாக அவர்களுடன் இணைந்து கொண்டான்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now