பகுதி - 31

Start from the beginning
                                    

"நாம சந்திச்சு பத்து நாள் கூட ஆகாத நிலைமையில என் மேல.ஏன் இவ்வளவு பாசம் வச்சீங்க விக்ரம்?"

" பத்து நாளா???? ம்..... நான் உன்னை முதன்முதல்ல பார்த்தது ஆறு வருஷத்துக்கு முன்னாடி."

" என்ன?? "

" ம்..ஆமா என்னோட யு.ஜி முடிச்சிட்டு பி.ஜி பண்ண ஸ்டேட்ஸ் போயிருந்தேன்.அப்போதான் உன்னை ஒரு நாள் மெட்ரோல பார்தேன்."

"ஆனால் எனக்கு உங்களை பார்த்த நியாபகம் இல்லையே விக்ரம்."

" நான்தான் உன்னை பார்த்தேன்  நீ கண்ண மூடி ஏதோ யோசனையில இருந்த. மடியில உன்னோட பிங்க கலர் ஜெர்கின வெச்சிட்டு அழகான பிங்க் கலர் தேவதையா ஜொலிச்சிட்டு இருந்த உன்மேல இருந்து என்னால கண்ணை நகர்த்தவே முடியலை. ஆனால் உன்னை பின்தொடர முடியாம அவசரமா போக வேண்டியதால மிஸ் பண்ணிட்டேன்."

" என்னை அப்போவே தேடி வந்திருக்கலாமே விக்ரம்.அப்படி மட்டும் நடந்திருந்தா எத்தனையோ விஷயம் நடக்காமலே போயிருக்குமே.எனக்கும் இந்த நிலைமை வந்திருக்காதே." என்று கூறி கலங்கியவளை தேற்ற முடியாமல் நின்றவன்," உன்னை எங்கனு போய் தேட மது.அவ்ளோ பெரிய கலிஃபோனியால உன் பேரு உன் நாடு எதுவும் தெரியாம எங்கனு போய் தேட சொல்ற?"

" சாரி விக்ரம் எனக்கு புரியுது.உங்களை நான் தப்பு சொல்லலை ஏதோ ஆதங்கத்தில அப்படி சொல்லிட்டேன்."

" இல்லை மது நீ இன்னைக்கு கேட்டது எனக்கு எப்பவோ தோனிருச்சு.நீ உன்னை வருத்தப்படுத்திக்காத. நடந்தது யாராலும் மாத்த முடியாது. சரி நேரம் ஆகிட்டே இருக்கு வா கிளம்பலாம்,"என்றவனை மௌனமாக பார்த்த மதுமிதா," விக்ரம் இப்ப நான் சொல்றதை நீங்க தப்பா எடுத்துக்காம என்னை புரிஞ்சுப்பீங்களா??"என வினவினாள்.

அவள் முகபாவத்திலிருந்தே அவள் கூற வருவதை ஒருவாறு யூகித்த விக்ரம்," ம்....சொல்லு," என்றான் உணர்ச்சியற்ற குரலில்.

" நம்ம பழக ஆரம்பிச்சு பத்து நாள் கூட முழுசா முடியலை.அதுக்குள்ள நம்மகிடையில எப்படி இப்படி ஒரு பந்தம் உருவாச்சுனு எனக்கு புரியலை.அதனால...."

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Where stories live. Discover now