பகுதி 40

256 17 0
                                    

"உள்ளே வரலாமா....."என்று தன் வீட்டு அடுக்களைக்குள் தயங்கியபடி நுழைந்த மதுமிதாவை அங்கே சமையல் செய்து கொண்டிருந்த பெண்," அட உள்ள வாங்கம்மா எதுக்கு தயங்குறீங்க ,"என்று அழைத்தார் .

"சரோஜா அக்கா நீங்க பண்ற சமையல் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு ஒரு சின்ன உதவி பண்ண முடியுமா?" என்று மதுமிதா கேட்டாள்.

" என்ன சொல்லு மா. உனக்கு என்ன வேணும் சொல்லுங்க ."

" எனக்கு சமையல் பண்றதுக்கு கொஞ்சம் கத்துக் கொடுக்க முடியுமா?"

"நான் எப்படி மா உங்களுக்கு சமையல் கத்துக் கொடுக்க முடியும்? பெரியம்மாவுக்கு தெரிஞ்சா ஒன்னு தப்பாகாதா "

" அதெல்லாம் ஒன்னும் ஆகாது கா. நான் அம்மா கிட்ட ஏற்கனவே இதை பத்தி சொல்லிட்டேன் அம்மா உங்க கிட்ட கத்துக்க சொன்னாங்க .எனக்கு இன்னைக்கு தான் லீவு சனிக்கிழமை மதியானத்துக்கு மேல தான் என்னால் வரமுடியும் அப்போ அம்மா கோயிலுக்கு போயிடுவாங்க அதனால அவங்களால சொல்லிக் கொடுக்க முடியாது."

"சரிங்க அம்மா அப்ப நான் சொல்லி தரேன் இன்னிக்கி தொடங்கலாமா?? முதல்ல காய்கறிகளை கட் பண்றதுக்கு நான் சொல்லித்தாரேன் அதுக்கப்புறம் படிப்படியா ஒன்னொன்னா சொல்லித்தரேன் சரியா?"

"ஓ... சரிங்க அக்கா."

புதிதாக பள்ளி செல்லும் குழந்தை போல மிக குதூகலமாக தன் வேலையை செய்யத் தொடங்கினாள்.
அவர் கொடுத்த வேலையை மிகவும் உற்சாகத்துடன் செய்த மதுமிதா மிக விரைவாகவே காய்கறிகளை நறுக்குவதற்கு கற்றுக்கொண்டாள்.

"அக்கா டீ எப்படி டேஸ்டா போடுறீங்க எனக்கு அது சொல்லிக் கொடுங்களேன்."

"அது ரொம்ப ரொம்ப ஈஸி மதும்மா நம்ம வீட்ல தம் டீ தான் போடுவேன். தம்டீக்கு பாலு டீ தூளு தண்ணி சக்கரை எல்லாத்தையும் ஒண்ணா போட்டு நல்லா கொதிக்க விடணும். நல்லா மல மலனு கொதிச்சு வரும்போது அடுப்பை சின்னதாக வச்சு ரெண்டு நிமிஷம் கொதிநிலையில் வைத்து வடிகட்டி கொடுத்திடனும்."

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Where stories live. Discover now