வெறுப்பும் கவலையும்

2K 91 30
                                    

தன் நினைவுகளில் மூழ்கியிருந்த ஆதித்யனை தூரத்தில் கேட்ட அழுகுரல்  சுய உணர்வு கொள்ளச்செய்தது. அவன் அமர்ந்திருந்த மருத்துவமனை வளாகம் மெல்ல மெல்ல உணவகமாக மாற தான் இருக்கும் நிலையை உணர அவனுக்கு ஒரு முழு நிமிட நேரம் தேவையானதாக இருந்தது.

தன் எதிரே தன்னை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்த தன் நண்பனை பார்த்தவன் அவனது ஊடுருவும் விழியை சந்திக்க தைரியம் இல்லாமல் சுற்றுபுறம் நோக்கினான்.

அங்கு அமர்ந்திருந்த அனைவரும் தத்தமது உணவில் மூழ்கியிருக்க ஆதித்யன் அமர்ந்திருந்த மேஜையில் மட்டும் உணவு தீண்டப்படாமல் இருந்தது.

" ஏன் மச்சான் சாப்பிடாம என்னையே பார்த்திட்டு இருக்குற ? நான் என்ன அவ்ளோ அழகாவா இருக்கேன்?" நிலைமையை சீராக்கும் பொருட்டு வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் கேட்ட ஆதித்யனை ஒரு பெருமூச்சுடன் நோக்கிய ஜீவா எதுவும் கூறாமல் தனது உணவை உண்ண துவங்கினான்.

தன் முன்னே இருந்த உணவினை வேண்டா வெறுப்பாக உண்ண துவங்கிய ஆதித்யன் பின்பு வேக வேகமாக உண்ண துவங்கினான். அவன் தட்டை நிமிடத்திற்குள் காலி செய்ததை வைத்தே அவனது பசியின் அளவை உணர்ந்து கொண்ட ஜீவா அவனுக்கு மேலும்  உணவினை தருவித்தான். அதையும் நிமிடத்திற்குள் காலி செய்தவன் தன் நண்பனை பார்த்தவன்,"ஈ....ஈ....நல்ல பசி மச்சான் அதான் ஆமா நீ சாப்டியா??" என்று வினவ அவனிடம்  எதுவும் கூறாமல் எழுந்து கைகழுவ சென்றான் ஜீவா.

நண்பனின் இந்த புதிய பரினாமம் ஆதித்யனை வியப்படைய செய்ய அமைதியாக ஜீவாவை பின்தொடர்ந்து ஹோட்டலை விட்டு வெளியே வந்தவன் ஜீவாவின் முன்னே சென்று  ," டேய் ஏன்டா நீயும் என்னை வதைக்கிற?"அப்படி நான் என்ன தப்பு செஞ்சேன்னு நீ இவளோ கோபமா அதுவும் என் கூட பேசாம இருக்க??" ஆற்றாயையுடன் வெளிவந்தது ஆதியின் குரல்.

ஆதியை கண்டுகொள்ளாமல் அவனை கடந்து சென்ற ஜீவா தன் பைக்கை ஸ்டார்ட் செய்து ஆதிக்காக காத்திருக்க , வேறு வழியில்லாத நிலையில் ஆதி அவன் பின்னே சென்று அமர்ந்து கொண்டான்.

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Wo Geschichten leben. Entdecke jetzt