பகுதி 29

1.1K 47 6
                                    

மதுமிதா வை அவள் வீட்டில் இறக்கிவிட்ட ஆதித்யன் சந்தோஷ மனநிலையுடன் தன் இல்லம் நோக்கி சென்றான்.அயர்ந்து உறங்கும் தன் மகள் நிலாவின் அருகே படுத்தவன் நெடுநாட்களுக்கு பிறகு நிம்மதிமாக உறங்கினான்.

அடுத்த நாள் காலை மிக அழகாக விடிய நிலா உறங்கையில் அவளுக்கு தேவையான உணவை தயாரித்த ஆதி.அவளிடம் விரைந்தான் ," நிலா.....குட்டி.....எந்திரிங்க எந்திரிங்க இன்னைக்கு தான் கடைசி நாள் ஸ்கூல்....கம்ஆன் கம்ஆன்."

" ம்...அப்பா ஒரு ஐஞ்சு நிமிஷம் மட்டும் தூங்கிக்கறேனே....ப்ளீஸ்...."

" சரி ஐஞ்சு நிமிஷம் தான் " என்று கூறியவன் அவளுக்காக வெந்நீரை தயார் செய்தான்.

தன் மகளை கெஞ்சி கொஞ்சி ஒரு வழியாக பள்ளியில் இறக்கி விட்டவன் இடையில் அவள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் சொல்ல தவறவில்லை.

நிலாவை பள்ளியில் விட்டவன் அவள் பள்ளி அலுவலகத்திற்குள் நுழைந்தான் . நிலாவின் கோப்புகளை வாங்கி அவர்களிடமிருந்து விடைபெற்றவன் நிலாவின் வகுப்பறையில் இனிப்புகளை வழங்கிவிட்டு நிலாவை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

" அப்பா...அப்பா...நான் கொஞ்ச நேரம் இந்த பார்க்ல விளையாடவா ? அடுத்து எப்ப இதை பார்க்க போறோம்னு தெரியலையே,"முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு பேசிய தன் பெண்ணை கண்டு சிரித்தவன்," ஏய் வாலு இந்தா இருக்கிற பெங்களூர் தான் போகப்போறோம் அதுக்கு எதுக்கு இவ்ளோ சோகம் ,அப்பா போய் பைக் எடுத்திட்டு வர்ற வரை நீ இங்க விளையாடு சரியா .நான் வந்து ஹார்ன் அடிக்கறேன்."

" தேங்கயூ டாடி...." என்றவாறு பார்க்கிற்குள் சென்றாள்.சிறிது நேரம் வரை விளையாட்டில் கவனமாக இருந்த நிலா மது உள்ளே நுழைந்ததையோ தன்னை கவனிக்க தொடங்கியதையோ உணரவில்லை.

" ஹாய்...பேபி" என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்த நிலா அங்கே தன் தாயை பார்த்து திகைத்தாள்." அம்மா......" என்று அழைத்து மதுமிதாவை கட்டிக்கொள்ள ஆவல் பிறந்த போதும் தன் தந்தையின் பேச்சு நினைவிற்கு வர தன்னை தன் தாயக்கு அடையாளம் தெரியவில்லை என்று புரிந்து கொண்டவள் " ஹாய்..."என்று கூறி புன்னகை பூத்தாள்.

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Tempat cerita menjadi hidup. Temukan sekarang