சந்திப்பு

1.3K 71 22
                                    

மதுமிதாவின் நிலையை பார்த்ததிலிருந்தே ஆதித்யனின் மனம் ஒரு நிலையில்லாமல் தவித்துக்கொண்டிருந்தது.

மதுவை நெருங்க முடியாத தனது இயலாமை ஆதித்யனை தன் நிலை மறக்கச்செய்தது. புயலென கான்ஃபிரன்ஸ் ஹாலை விட்டு வெளியேறியவன் தனது  கேபினுக்குள் நுழைந்து குறுக்கும் நெடுக்குமாக நடக்கலானான் .நேரம் ஓடியதே தவிர அவனால்  நிதானத்திற்கு வர இயலவில்லை. தான் இருப்பது அலுவலகம் என்பதை உணர்ந்தவன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவர பெரிதும் முயற்ச்சித்தான் அவனால் முயல மட்டுமே முடிந்ததேயொழிய அதில் வெற்றி பெற இயலவில்லை. ஒரு பெருமூச்சுடன் வேகமாக அலுவலகம் விட்டு வெளியேறியவன் பார்க்கிங்லாட் சென்று தனது வெள்ளை நிற  இடியோஸ் (etios)வாகனத்தை உயிர்பிக்க அவனுக்கு எதிரே இருந்த காரையும் ஒருவன்  உயிர்பிக்க அதன் பின் கதவை திறந்து வைத்திருந்து யாருக்கோ காத்திருந்தான் மற்றவன்.அவர்கள் செயலை கவனித்துக்கொண்டிருந்த ஆதியின் கவனத்தை கலைத்தது தன் மனைவியை கைகளில் ஏந்தி வத்துக்கொண்டிருந்த ஆனந்தின் பதட்டமான குரல்," பாட்டி நீங்க முன்னாடி ஏறிக்கோங்க , டிரைவர் சீக்கிரம் வண்டியெடு," என்றபடி கட்டளையிட்டான் அவன் மதுவை தூக்கி வந்தது  ஆதிக்கு  மேலும் சினத்தை கொடுக்க  ஆக்ஸகலேட்டரை வேகமாக மிதித்தவன்  அதிவேகமாக அங்கிருந்து சென்றுவிட்டான். அவனது வேகம் அங்கிருந்த அனைவரையும் திரும்பி நோக்க வைத்தது.
கற்பகதேவியோ முகத்தில் சினத்துடன்," யாரு இவ்ளோ திமிரா போறது?" என வினவ அவரை தடுத்த ஆனந்த்," பாட்டி ப்ளீஸ் முதல்ல மதுவ கவனிப்போம்," என்று அவரை அழைத்து சென்றான்.

அதிவேகமாக வண்டியை ஓட்டிய ஆதி அரைமணி நேரத்திற்கு பிறகு அலுவலகம் திரும்பினான் .நிதானமாக வண்டியை பார்க் செய்துவிட்டு அலுவலக தளத்தில் நுழைந்தவன் முகத்தில் பழைய நிதானமும் புன்சிரிப்பும் குடியிருந்தது. அன்று முழுவதும் அவன் முகத்தில் தங்கிவிட்ட சிரிப்பை பார்த்த ஜாக்கின் மனம் சிந்தனை வயப்பட்டது.

அன்று முழுவதும் அவன் நிதானமான மனநிலையிலேயே இருந்தான் அடுத்த நாள் காலையில் மதுவை பார்க்கும் வரை.

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Where stories live. Discover now