மீண்டும் மீண்டும்

1.8K 97 11
                                    

தன் மகளை குறித்து கவலை கொண்ட அந்த தாய் கண்கள் மூடி இறைவனை பிராத்திக்க தொடங்கினார். ஏதோ ஒரு வித முனகல் சத்தம் அவரது செவியை எட்ட அவசரமாக கண் திறந்து பார்த்தவரால் தன் மகளின் இதழ்கள் லேசாக அசைவதை உணரமுடிந்தது கூடவே  மெல்லிய முனகல் சத்தமும் கேட்டது. சந்தோஷம் கொண்டவராக  வேகமாக தன் மகளின் அருகே சென்றவர் மெதுவாக அவளின் செவிகளில் பேசலானார்," அம்மாடி....எந்திரிமா...உனக்கு ஒன்னுமில்லை கண்ணு திறந்து பாருமா நாங்களாம் ரொம்ப பயந்து போயிருக்கோம்," என்றுரைத்தார்.

அவரது பயம் கலந்த அக்கரை புரிந்தோ என்னவோ மது மெதுவாக தன் கண்களை திறந்து அந்த அறையை ஆராயத்துவங்கினாள்.அவள் கண்களில் வேதனையைவிட குழப்பம் மேலோங்கி இருக்க அதை புரிந்து கொண்ட அந்த தாய் ," என்னாச்சுடா..ஏன் அப்படி பார்குற?" என்று வினவ அதற்கு மதுவோ," என் மேல இவ்வளவு கரிசனம் காட்டுர நீங்க யாரு என்னை ஏன் இங்க கொண்டு வந்திருக்கீங்க??இது என்ன இடம்," என்று கேள்விகள் கேட்க துவங்க  அந்த தாயும் அதே நேரத்தில் மருத்துவருடன் உள்ளே நுழைந்த அவளது தந்தையும் ஒரு சேர அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த பெற்றோர் ஏதும் கூறும் முன் மருத்துவரோ," ஹலோ மிஸ்....குட் மார்னிங் ஒன்னும் பிரச்சினை இல்லை நீங்க கண்ண மூடி நல்லா ரெஸ்ட் எடுங்க உங்களுக்கு மயக்கமருந்து கொடுத்திருக்கிறதனால அப்படி தோணுது," என்று கூறியவர் அந்த பெற்றோர் இருவரையும் அழைத்துக்கொண்டு வெளியேறினார்.

அந்த அறைவாயிலை பார்த்தபடியே நின்றிருந்த ஆதித்யன் அவர்கள் மூவரும் பதட்டத்துடனும் குழப்பத்துடனும் வெளியேறுவதை பார்த்து அவர்களை பின்தொடரலானான்.அவர்கள் மூவரும் ஒர் இடத்தில் நிற்க அவர்களின் சம்பாஷனைகள் கேட்கும் தொலைவு நின்றவன் அவர்கள் அறியாமல் அவர்களை கவனித்தான்.

அமைதியாக தன்னை நோக்கி நின்றிருந்த அந்த பெற்றோரை பார்த்தவர் மருத்துவர்," அவங்களுக்கு பழைய விஷயம் எதுவும் ஞாபகத்தில இல்லை, ,அதுக்கு காரணம் அவங்க பின்தலையில நல்லா அடி பட்டிருக்கு அதனால ஏற்பட்ட பாதிப்பா இருக்கலாம்," என்று கூறி முடிக்க ," என்ன சொல்றீங்க டாக்டர்? அப்போ எங்களை கூட மறந்திடுவாளா?" என்று பதட்டத்துடன் வினவினார் அவளின் தாய்.

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Where stories live. Discover now