நலமறிதல்

2.3K 99 56
                                    

தன்னை நோக்கி வந்த அந்த இருவரையும் பார்த்துக்கொண்டிருந்த ஆதித்யன் தன் கைமீறி காரியங்கள் சென்றுவிட்டதை உணர்ந்து அமைதியாக நின்றான்.

அந்த இருவரில் ஒருவர்," ஏன் ஆதித்யா...எதையும் எடுத்தோம் கவிழ்தோம் னு முடிவு எடுக்காத னு உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா?? நீ என்ன பண்ணி வெச்சிருக்க னு உனக்கு தெரியுதா??"என்று குரலில் கோபமும் அதைவிட ஆதங்கமும் மேலிட கூற அவரை நிமிர்ந்து பார்த்த ஆதித்யனோ," நான் செஞ்சது தப்பும் இல்லை, அதை நினைச்சு நான் வருத்தப்படவும் இல்லை, இது ஒரு விபத்து அவ்வளவு தான், நீங்க இந்த சின்ன விஷயத்தை ஊதி பெரிசாக்காதீங்க, நான் ஏற்கனவே சொன்ன மாதிரி என் வாழ்க்கையை நானே பார்த்துக்கிறேன், நீங்க இரண்டு பேரும் கிளம்புங்க," என்று உணர்ச்சியற்ற  குரலில் கூறி
முடித்து நிலாவை தன்னுடன் அணைத்துக் கொண்டான்.

இதற்கு மேல் என்ன பேசினாலும் அவன் கேட்கமாட்டான் என்பதை உணர்ந்தவர் போல அந்த இரண்டாமவர்," சரி நாங்க பேசுற எதையும் நீ கேட்கிற மனநிலையில இல்லை னு எங்களுக்கு நல்லாவே புரியது ஆனால் இது ஒரு மருத்துவமனை இங்க குழந்தை இருக்க வேணாம் அவ முகத்தை பாரு ரொம்ப பயந்து போயிருக்கு  நான் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்.நீ எல்லா சரியானதும் குழந்தையை வாங்கிக்கோ ," என்று கூறி நிலாவின் அருகே சென்றார்," நிலா கண்ணு வாங்க வாங்க ," என்று அவளை தூக்க முயற்சிக்க அவரிடமிருந்து இரண்டு அடி பின்னே சென்ற ஆதித்யன்," என் பொண்ண பார்த்துக்க எனக்கு தெரியும்,  நீங்க யாரும் வேண்டாம் நானே எல்லாத்தையும் சமாளிச்சுக்குவேன் , நீங்க கிளம்பளாம்," என்று கூறினான்.

அவன் கூறியதை கேட்ட முதலாமவர்," டேய்... எத்தனை தடவை சொன்னாலும் நீகேட்க மாட்டியா?? ,அவ எனக்கு பேத்தி, அவளை நான் பத்திரமா பாத்துக்குவேன் , உன்கிட்ட யாரும் உத்தரவு கேக்கலை," என்று கூறியவர் அவன் கைகளிருந்த நிலாவிடம்," நிலாகுட்டி பாட்டி கிட்ட வாங்க... கொஞ்ச நேரம் நம்ம வீட்டுக்கு போயிட்டு அப்பறமா இங்க வரலாம்," என்று கூறி லாவமாக அவனிடமிருந்து அவளை வாங்கியவர் அவனை ஒரு முறை முறைத்துவிட்டு அந்த இரண்டாமவரை நோக்கி," ,உங்களுக்கு வேற தனியா சொல்லனுமா வாங்க வீட்டுக்கு போகலாம்," என்று கூறி முன்னே நடக்க அவரின் கணவர் பவ்யமாக அவரின் பின்னே  சென்றார்.

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Where stories live. Discover now