நினைவு

2.4K 101 33
                                    

எப்படிபட்ட துன்பம் வந்து சூழ்ந்த போதும் மனதைரியம் இருக்கும் வரை யாராலும் நம்மை ஒன்றும் செய்ய இயலாது. அதே நேரம் நம் மிகப்பெரிய எதிரி சுயபச்சாதாபம். அந்த எதிரியை நம்மை விட்டு விலக்கி வைப்பது சாலச்சிறந்தது. ஆனால் மதுவோ தன் நிலையை எண்ணி வருந்தி தன் மீதே சுயபச்சாதாபம் கொண்டாள் அதன் விளைவாக தன் கால் போன போக்கில் வீட்டை விட்டு வெளியே சென்றவள் அந்த வீட்டின் தோட்டத்தை அடைந்தாள். அதன் அழகான பூக்கள் அவளது மனதை கவரவில்லை அந்த பூக்களை ரீங்காரமிட்டு சுற்றிவரும் வண்டுகள் அவளை ஈர்க்கவில்லை அதை ரசிக்கும் மனநிலையில் இல்லாதவள் நேரே வாசலை அடைந்து தன் நிலை மறந்து வீட்டின் வெளி வாயிலை கடந்து செல்ல துவங்கினாள்.

கால்களில் செருப்பு இல்லாமல் கண்களில் கண்ணீர் வரவா வேண்டாமா என்று உத்தரவிற்காக காத்திருக்க வாடிய மலரை போன்ற தோற்றத்தில் வீட்டின் வெளிவாசலை கடந்த மதுவை கண்ட பரமுவிற்கு ஏதோ சரியில்லை என்று தோன்ற ," மதுமா.....," என அலறினார்.

அவரின் அலறல் கேட்டு சுய உணர்வு கொண்டவள் தான் அந்த ரோட்டின் நடுவில் நிற்பதையும் வேகமாக ஒரு வாகனம் தன்னை நோக்கி வருவதையும் உணர்ந்து விலக நினைக்கையில் அந்த வாகனம் அவளை இடித்து தள்ளியது.இடித்த வேகத்தில் ஒரு நொடி நின்ற அவ்வாகனம் மறு நொடி அவ்விடம் விட்டு பறந்து மறைந்தது.அதுவரை இருந்த மனதின் வலியும் உடலின் வலியும் சேர்ந்து கொள்ள மது மயங்கி கீழே விழுந்தாள்.

இவை அனைத்தும் கண் இமைக்கும் நொடி நடந்து முடிந்திருக்க வேகமாக மதுவிடம் விரைந்த பரமு அவளை எழுப்ப முயற்சித்தார் அதே நேரம் வீட்டினுள்ளே திரும்பி ," ஆதி ஐயா.....ஆதி ஐயா.....இங்க சீக்கிரமா வாங்களேன்," என்று பதட்டத்துடன் கத்தவும் மறக்கவில்லை.

கையில் நிலாவுடன் வேகமாக ஓடி வந்த ஆதி அங்கே பார்த்தது ரத்த வெள்ளத்தில் இருந்த மதுவை , ஒரு நிமிடம் அவனது இதயம் அதன் துடிப்பை நிறுத்தியதை உணர்ந்தவன்.நிலாவை கீழே இறக்கிவிட்டு ," மிது....மிது....என்னாச்சு மிது உனக்கு" , என்று அவளது தலையை தன் மடியில் வைத்து அவளது கண்ணங்களை தட்டி தட்டி அவளை எழுப்ப முயற்சித்துக்கொண்டிருந்தான்.

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Where stories live. Discover now